உருப்படியான வில்லன் வேணாமா?.. ஹீரோ ஆடியன்ஸை முறைக்கிறாரா? ஃபீனிக்ஸை விளாசிய புளூசட்டை மாறன்

By :  SANKARAN
Published On 2025-07-05 12:09 IST   |   Updated On 2025-07-05 12:12:00 IST

விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய் சேதுபதி நடித்த பீனிக்ஸ் வீழான் படம் நேற்று வெளியானது. இந்தப் படத்தோட விமர்சனம் குறித்து பிரபல யூடியூபர் புளூசட்டை மாறன் என்ன சொல்றாருன்னு பாருங்க. படத்தோட ஆரம்பத்துல ஹீரோ ஒரு பயங்கரமான கொலையைப் பண்றாரு. அதுக்காக அவரை அரெஸ்ட் பண்ணி கோர்ட்ல நிப்பாட்டுறாங்க.

அங்கே இவர் 18 வயசுக்குக் குறைவானவர் என்பதால சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிடுறாங்க. வில்லன் கோஷ்டி எல்லாம் இவரை அங்கேயே போட்டுத் தள்ளிட வேண்டியதுதான்னு முதல்ல ஒரு நாலு பேரை அனுப்புறாங்க. அவங்களையும் அடிச்சித் துவைக்கிறாரு. அப்புறம் 40 பேரை அனுப்புறாங்க. அவங்களையும் அடிச்சித் துவைக்கிறாரு.

அப்புறம் 4000 பேரை அனுப்புறாங்க. அவங்களை இவ்ளோ பேரை அடிக்கிற இந்த அப்பாடக்கரு யாரு? அவரு ஏன் ஜெயிலுக்கு வந்தாரு அதான் கதை. ஃபைட் மாஸ்டர் அனல் அரசு இந்த ஆக்ஷன் படத்தை இயக்கி இருக்காரு. ஃபுல் ஆக்ஷன் படத்துல உருப்படியான வில்லன் இருக்க வேணாமா? வில்லனைக் கொன்னுட்டுத்தான் ஜெயிலுக்கே வந்துருக்காரு.

சரி. வெளியில இருக்குற வில்லனாவது கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்க வேணாமா. எல்லாம் சப்பை தான். அவங்க ஆளை ஏவிக்கிட்டு இருக்காங்க. நேரா வந்து அடி வாங்கிட்டுப் போறதுதான் அவங்க வேலையா இருக்கு. கொலை செய்றவங்க யாருன்னு விசாரிக்க ஒரு போலீஸ் ஆபீசர போட்டுருக்காங்க. ஹீரோவை விட்டுட்டு ஊர் பூராவும் விசாரிக்கிறாரு.


ஹீரோ எப்படி இவ்ளோ பெரிய அப்பாடக்கடரா ஆனாருங்கறதுக்கு மொக்கையான பிளாஷ்பேக் வச்சிருக்காங்க. யாரு வந்தாலும் இழுத்துப் போட்டு அடிக்கிறதுக்குத் தான் ஹீரோவோட வேலை. படம் ரிலீஸாவதற்கு முன்னாடியே இவரு உலகப்பிரசித்திப் பெற்றுட்டாரு.

விஜய் சேதுபதி பையனாச்சே. நல்லா நடிப்பாருன்னு பார்த்தா நடிக்கணுமா, வேணாமா? ஹீரோ நான் நடிக்கணுமா, நடிக்க முடியாதுடா. போங்கடான்னு ஆடியன்ஸைப் பார்த்து முறைச்சி முறைச்சி பார்க்குறாரு. ஒவ்வொரு சீனுமே அதையேத் தான் பண்றாரு. நடிக்க முடியாதுடா. என்னடா பண்ணுவீங்க? அப்படிங்கற மாதிரி பண்றாரு. இது திமிர்த்தனம் தானே என்கிறார் புளூசட்டை மாறன்.

Tags:    

Similar News