ஸ்வீட் ஹார்ட் படம் எப்படி இருக்கு? யுவன் கல்லா கட்டுவாரா? அட ரம்பாவே சொல்லிட்டாரே!
இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் ஸ்வீட்ஹார்ட். இதன் ரன்னிங் டைம் 2மணி நேரம் 24 நிமிடம். ஸ்வினித் சுகுமார் இயக்கியுள்ளார். இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரென்ஜி பனிக்கர், ரெடின் கிங்ஸ்லி, அருணாச்சலேஸ்வரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் எப்படி இருக்கு என்பதை படம் பார்த்த சில பிரபலங்கள் தங்களது கருத்தைத் தெரிவித்துள்ளனர். வாங்க பார்க்கலாம். ரியோவுக்கு ஜோ படத்துக்குப் பிறகு ரொம்ப அருமையாக இருக்கிறதாம். கிளைமாக்ஸ்லயும், இன்னொரு இடத்துலயும் பின்னிப் பெடல் எடுத்து இருக்கிறாராம்.
பிக்பாஸ் சௌந்தர்யா இந்தப் படத்தைப் பற்றி கூறுகையில் 'படம் வந்து ரொம்ப நல்லாருந்தது. அவங்களோட ஜோ மூவியைக் கம்பேர் பண்ணும்போது இதுல நிறைய எமோஷனல பார்க்கலாம். ரிலேஷன்ஷிப், லவ் இதெல்லாம் ரொம்ப சூப்பராக காமிச்சிருக்காங்க. யுவன் சார் புரொடக்ஷன்ல ரொம்ப நல்லா வந்துருக்கு. அவருக்கு வாழ்த்துக்கள்' என்றார்.
ரம்பா பேசும்போது 'இந்தப் படம் ரொம்ப நல்லாருக்கு. எனக்கு இந்தப் படத்துல பிடிச்சது என்னன்னா இது கம்ப்ளீட்டா பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும். ஒவ்வொரு பெண்ணும் உறவுக்குக் காரணமாகிறார்கள். ஒரு கேர்ள் பிரண்ட், பாய் பிரண்ட், ஒரு அம்மா, ஒரு குடும்பத்தையே உருவாக்கலாம். சில இடத்துல நல்ல சிரிச்சிருக்கேன். சில இடத்துல கண்ணுல தண்ணீர் வந்தது' என்றார்.
ஸ்வீட் ஹார்ட் படத்தைப் பொருத்த வரை இயக்குனர் ஸ்வினித் சுகுமாருக்கு இது முதல் படம். ஆனால் அந்த மாதிரியே இல்ல. நல்ல அனுபவசாலி மாதிரி படத்தை சூப்பராக இயக்கி இருக்கிறாராம். அதே போல தயாரிப்பாளரும், இசை அமைப்பாளருமான யுவன் சங்கரராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம் என்கிறார்கள்.
அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் அருமையாக உள்ளதாகவும் படம் பார்த்தவர்கள், அதில் நடித்தவர்கள் சிலாகித்துச் சொல்கின்றனர். அத்தனை பேரும் பாராட்டும் இந்தப் படம் யுவனுக்குக் கைகொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.