வெற்றிமாறன் சம்பவம் லோடிங்!.. தெறிக்கவிட்ட விஜய் சேதுபதி.. விடுதலை 2 ட்விட்டர் விமர்சனம்..
விடுதலை 2: வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, கௌதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் ஆகியோர் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் விடுதலை 2. விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாகம் கடந்த இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்டு வந்தது. பொதுவாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தின் வெளியாகும் படங்கள் அனைத்துமே மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படமும் சமூகத்திற்கு ஒரு கருத்தை எடுத்துக் கூறும் படமாக அமையும்.
அப்படிதான் விடுதலை திரைப்படமும் இருந்தது. முதல் பாகத்தில் நடிகர் சூரிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டாவது பாகம் விஜய் சேதுபதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கின்றது. முதல் பாகத்தில் நடிகர் விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியார் என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
அவரின் ஆரம்பகால கதையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கி இருக்கின்றார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கின்றார். இந்த திரைப்படத்திற்கு தமிழகத்தில் 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.
இருப்பினும் பெங்களூரு போன்ற பகுதிகளில் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த காரணத்தால் படம் பார்த்த ரசிகர்கள் தங்களது ட்விட்டர் பக்கங்களில் விமர்சனங்களை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் ட்விட்டர் பக்கங்களில் ரசிகர்கள் படத்தை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.
விஜய் சேதுபதியின் இன்னொரு முகத்தை விடுதலை 2 திரைப்படத்தின் மூலமாக நம்மால் பார்க்க முடியும். அந்த அளவிற்கு மனுஷன் நடிப்பில் மிரட்டி இருக்காரு.. வெற்றிமாறனுக்கு மீண்டும் ஒரு தேசிய விருது கன்பார்ம். படம் கல்ட் கிளாசிக் என்று கூறி இருக்கிறார்கள். அதிகாரத்திற்கு எதிராக மக்களின் குரலாக இந்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கின்றது.
படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு மட்டும் அல்லாமல் காதல் காட்சிகளையும் அழகாக சித்தரித்து இருக்கின்றார் இயக்குனர் வெற்றிமாறன். விஜய் சேதுபதி மற்றும் மஞ்சுவாரியருக்கு இடையே இருக்கும் காதல் காட்சி மிகச் சிறப்பாக இருக்கின்றது. படத்தின் முதல் 30 நிமிடம் மாஸாக இருக்கின்றது.
விஜய் சேதுபதியின் டயலாக், ஆக்சன் காட்சிகள் பக்காவாக இருக்கின்றது. புரட்சி பற்றிய கருத்துக்கள் இந்த திரைப்படத்தில் அதிக அளவில் இருக்கின்றது என்று தொடர்ந்து ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள். ஆக மொத்தம் இப்படத்தின் மூலமாக வெற்றிமாறன் மீண்டும் ஒருமுறை தன்னை ஒரு சிறந்த படைப்பாளியாக நிரூபித்து இருக்கின்றார்.
Also Read : விடுதலை 2 படம் வேற லெவல்!. நிறைய டிபேட் நடக்கும்!.. வெளியான முதல் விமர்சனம்!..