வலிக்குதுடா!... ஆர்ஜே பாலாஜிய இப்படி கதறவிட்டீங்களே?!... பட்டையை கிளப்பிய 'சொர்க்கவாசல்' ட்ரெய்லர்!...

by ramya suresh |   ( Updated:2024-11-23 07:12:01  )
rj balaji
X

rj balaji

ஆர் ஜே பாலாஜி நடிப்பில் உருவாகி இருக்கும் சொர்க்கவாசல் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கின்றது.

வானொலியில் ஆர்.ஜே வாக தனது பயணத்தை தொடங்கிய ஆர் ஜே பாலாஜி. பின்னர் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் ஹீரோ, இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவராக மாறி இருக்கின்றார். எல்கேஜி என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமான ஆர் ஜே பாலாஜி அதனை தொடர்ந்து ரன் பேபி ரன், சிங்கப்பூர் சலூன் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருக்கின்றார்.

இதையும் படிங்க: ரஹ்மான் எப்படிப்பட்டவருனு தெரியும்..எல்லாம் பணத்துக்காக தான்! பாடகர் போட்ட பதிவு

அது மட்டும் இல்லாமல் வீட்ல விசேஷம், மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட திரைப்படங்களையும் இவர் இயக்கி இருக்கின்றார். தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் வளம் வருகின்றார். அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து சூர்யா45 திரைப்படத்தை இயக்க இருக்கின்றார். இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் நடிகர் ஆர்.ஜே பாலாஜி தற்போது சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் சொர்க்கவாசல் இந்த திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படத்தை ஸ்வைப் ரைட் நிறுவனம் தயாரித்து உள்ள நிலையில் கிறிஸ்டோ சேவியர் இசையமைத்திருக்கின்றார்.

sorgavasal

sorgavasal

ஆர்.ஜே பாலாஜியுடன் இணைந்து செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல், எழுத்தாளர் சோபா சக்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். மத்திய சிறை சாலையை மையமாக வைத்து 1999 ல் நடக்கும் கதையாக இப்படம் உருவாகி இருக்கின்றது. திரில்லர் கதை களத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கின்றது.

இந்த நவம்பர் 27ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கின்றது. அதில் முழுக்க முழுக்க சிறை சாலையை மையமாக வைத்து எடுத்திருக்கிறார்கள் என்பது தெரிகின்றது.

இதையும் படிங்க: Biggboss Tamil 8: வைல்டு கார்டு போட்டியாளர் ‘ரீ-என்ட்ரி’… ‘இதுக்கு பருத்திமூட்டை’.. ரசிகர்கள் கிண்டல்!

ரவுடிகள் மற்றும் போலீஸிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் ஆர்.ஜே பாலாஜி அதிலிருந்து எப்படி தப்பிக்கின்றார் என்பதை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகின்றது. ட்ரெய்லர் முழுக்க ஆர்.ஜே பாலாஜி அடி வாங்கிக் கொண்டிருக்கின்றார். ஒரு கட்டத்தில் வலிக்குதடா என்று அவரை கதற விட்டிருக்கிறார்கள். இந்த ட்ரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Next Story