இழவு வீட்டுல என்ன ரொமான்ஸ்!.. தல தளபதி சலூனையே ஓவர்டேக் செய்த சந்தானம்.. பில்டப் டீசர் எப்படி இருக்கு?
நடிகர் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் மிகப் பெரிய ஹிட் அடித்த நிலையில், அடுத்ததாக ’80ஸ் பில்டப்’ எனும் படத்தை இந்த மாதம் வெளியிட உள்ளார். தற்போது அதன் டீசர் வெளியாகி உள்ளது. பிரபுதேவாவை வைத்து குலேபகவாலி, ஜோதிகாவை வைத்து ஜாக்பாட் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் நடிகர் சந்தானம், ராதிகா பிரீத்தி, கே எஸ் ரவிக்குமார், ஆனந்த்ராஜ் மற்றும் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் […]
நடிகர் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் மிகப் பெரிய ஹிட் அடித்த நிலையில், அடுத்ததாக ’80ஸ் பில்டப்’ எனும் படத்தை இந்த மாதம் வெளியிட உள்ளார். தற்போது அதன் டீசர் வெளியாகி உள்ளது.
பிரபுதேவாவை வைத்து குலேபகவாலி, ஜோதிகாவை வைத்து ஜாக்பாட் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் நடிகர் சந்தானம், ராதிகா பிரீத்தி, கே எஸ் ரவிக்குமார், ஆனந்த்ராஜ் மற்றும் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: தீபாவளிக்கு ஜப்பான் வருது!.. அடுத்து கார்த்தியை வம்பிழுப்போம்.. பக்காவா ரூட்டு போட்ட ப்ளூ சட்டை மாறன்!
பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் தல தளபதி சலூன் காமெடியை நடிகர் சந்தானம் வைத்திருப்பார். 80s பில்டப் படத்தில் ரஜினி மற்றும் கமல் ரசிகர்கள் இடையே உள்ள போட்டியை மையமாகக் கொண்டு படம் உருவாகி இருப்பது போலவும் தனது தாத்தா ஆர். சுந்தர்ராஜன் உயிரிழந்த பின்னர் இழவு வீட்டுக்கு வரும் ஹீரோயினுடன் ஏற்படும் காதல் கலாட்டா கதையாக படம் உருவாகியுள்ளது.
சந்தானம் படத்தில் எப்போதுமே இடம்பெறும் ஆனந்த்ராஜ் இந்தப் படத்தில் பெண் வேடத்தில் வரும்போதே ரசிகர்களை குபேரன் சிரிக்க வைத்து விடுகிறார். அவர் இடுப்பை ஆடுகளம் நரேன் பிடிக்கும் காட்சிகள் எல்லாம் வேற லெவல் காமெடியாக உள்ளது.
இதையும் படிங்க: கம்பேக் கொடுக்கப் போறாரா கார்த்திக் சுப்புராஜ்!.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் டிரெய்லர் தரமா இருக்கே!..
ஏற்கனவே வெளியான மினி டீசரில் திருமணமாகி போட்டோ பிடிக்கும் காட்சி மட்டுமே இடம் பெற்றிருந்த நிலையில் அந்த ஒரு சீனியர் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்திருந்தது. இந்நிலையில், ஒட்டுமொத்த 80ஸ் பில்டப் டீசர் இன்னமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
மேலும், டிடி ரிட்டர்ன்ஸ் ஹிட்டான நிலையில், இந்த படத்திலும் இறந்தவர்கள் எல்லாம் பேசுவது போன்ற காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாத இறுதியில் வரும் நவம்பர் 24ம் தேதி சந்தானம் மீண்டும் ரசிகர்களை சிரிக்க வைக்க ரெடியாகி உள்ளார் என்றே தெரிகிறது. வெயிட் பண்ணி பார்ப்போம்.