விழாவுக்கு குடிச்சுட்டு வந்து அட்ராசிட்டி செய்த சீரியல் நடிகை! என்னது ராஜாராணி சீரியலா?
ஹிந்தியில் மிகவும் பிரபலமான 'தியா ஆர் பாத்திகம்' என்ற சீரியல் தமிழில் டப் செய்யப்பட்டு "என் கணவன் என் தோழன்" என்ற பெயரில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த சீரியலில் நடித்த நடிகை தீபிகா சிங். சீரியல் ஹிந்தியிலும் சரி தமிழிலும் சரி ஒளிபரப்பானது முதல் டிஆர்பியில் முதலிடம் வகித்து வந்தது. இதில் நடித்த அந்த நடிகையான தீபிகா சிங்கிற்கு இதுவே முதல் அறிமுகம். முதல் சீரியல் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதுடன் முதன்மை கதாபாத்திரத்திலும் குறிப்பாக ஒரு ஐபிஎஸ் […]
ஹிந்தியில் மிகவும் பிரபலமான 'தியா ஆர் பாத்திகம்' என்ற சீரியல் தமிழில் டப் செய்யப்பட்டு "என் கணவன் என் தோழன்" என்ற பெயரில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த சீரியலில் நடித்த நடிகை தீபிகா சிங். சீரியல் ஹிந்தியிலும் சரி தமிழிலும் சரி ஒளிபரப்பானது முதல் டிஆர்பியில் முதலிடம் வகித்து வந்தது. இதில் நடித்த அந்த நடிகையான தீபிகா சிங்கிற்கு இதுவே முதல் அறிமுகம்.
முதல் சீரியல் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதுடன் முதன்மை கதாபாத்திரத்திலும் குறிப்பாக ஒரு ஐபிஎஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். சந்தியா என்ற கதாபாத்திரத்தில் தமிழில் நடித்த இந்த தீபிகா சிங்குக்கு ரசிகர்கள் அதிகமாகவே இருந்தன. இந்த சீரியலில் நடிக்கும் போதே இந்த தொடரை டைரக்ட் செய்த டைரக்டரை தீபிகா சிங் திருமணம் செய்து கொண்டார்.
இதையும் படிங்க : எம்.ஜி.ஆர் தோட்டத்தில் எலும்புக்கூடுகள் வந்தது எப்படி?.. திக் திக் பின்னணி இதுதான்!..
ஹிந்தியில் சக்க போடு போட்ட இந்த தொடர் தான் தமிழில் ராஜா ராணி 2வாக மலர்ந்தது. ஆனால் அந்த ஹிந்தி தொடரை ஒப்பிட்டுப் பார்க்கும்போது ராஜா ராணி 2 அந்த அளவுக்கு எடுபடவில்லை. ஹிந்தி தொடரில் ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கும் அந்த நாயகி நாட்டிற்காக உயிரை விடும்போது அவருடைய கணவரும் சேர்ந்து இறந்துவிடும் மாதிரியான காட்சியை வடிவமைத்து ரசிகர்களின் மனதை கண்கலங்க வைத்திருப்பார்கள்.
ஆனால் இந்த ராஜா ராணி 2 சீரியலில் கதையையே உல்டாவாக எடுத்து எப்படியோ முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சொதப்பி விட்டார்கள். அதுதான் இந்த ராஜா ராணி 2 தோல்விக்கு முக்கிய காரணமாகும். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ஹிந்தி சீரியல் நடிகையான தீபிகா சிங் ஒரு விழாவிற்கு வரும் போது கன்னம் எல்லாம் சிவந்து அழுததை போன்று இருந்தாராம். உடனே பத்திரிக்கையாளர்கள் அவர் அந்த விழாவிற்கு குடித்துவிட்டு வந்திருக்கிறார் என பல வதந்திகளை எழுதி இருக்கின்றனர்.
இதையும் படிங்க : கொட்டாங்குச்சியை வைத்து மியூசிக் போட்ட கதை!.. இன்னமும் எனக்கு மியூசிக் போட தெரியாது!.. விஜய் ஆண்டனி ஓபன் டாக்!..
ஆனால் உண்மையில் தீபிகா சிங் அடுத்தடுத்த ஷூட்டிங்கால் மிகவும் களைப்படைந்து இருந்தாராம். அதனால் தான் அந்த மாதிரி இருந்தேன் என கூறி இருக்கிறார். மேலும் அதே சீரியலில் அவருடைய கணவராக நடித்த அனஸ் ரஸிதுடன் ஏகப்பட்ட மனக்கசப்பிலும் இருந்திருக்கிறார் தீபிகா சிங்க். அந்த சீரியல் படமாக்கும் போது ஒரு காட்சியில் அந்த நடிகர் தீபிகா சிங்கின் பின் பகுதியை பிடிக்கும்படியான காட்சியாம்.
ஆனால் அவர் தவறுதலாக முன்னாடி வந்து பிடித்து விட்டாராம். உடனே தீபிகா சிங் ஸ்பாட்டிலேயே அந்த நடிகரை பளார் என்று அறைந்து விட்டாராம். அதற்கு அந்த நடிகர் தெரியாமல் நடந்து விட்டது மன்னித்து விடுங்கள் என்று கூற சுமார் இரண்டு வருடங்கள் அவருடன் பேசாமலேயே அந்த சீரியலில் நடித்தாராம் தீபிகா சிங்.