பாண்டியன் ஸ்டோர்ஸ்2 பிரபலங்களின் சம்பளம் இவ்வளவா? இவங்கதான் டாப்பு…

முதலில் பெரிய அளவில் ரீச் இல்லாத பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

By :  Akhilan
Update: 2024-10-31 05:00 GMT

Pandian stores2: விஜய் டிவியின் பிரபல சீரியலாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் பிரபலங்கள் வாங்கும் சம்பளம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

சன் டிவியிடம் பின்தங்கி வந்த விஜய் டிவியை தூக்கி நிறுத்திய முக்கிய சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒன்று. மற்ற சீரியல்களைப் போல இல்லாமல் வில்லி எனக் குறிப்பிட்டு யாரும் இல்லாமல் சாதாரண குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகளை காட்சிகளாக அமைத்திருந்தது.

ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதத்தில் நல்லவர்களாக காட்டி இன்னொரு விதத்தில் அவர்களை பிரச்சனைக்கு காரணமாகவும் மாற்றி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் மற்றும் 3 தம்பிகளின் கதையை வைத்து முதல் சீசன் சமீபத்தில் முடிந்தது. இதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் அப்பா மற்றும் 3 மகன்களின் கதையை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. முதல் சீசனில் நடித்திருந்த ஸ்டாலின், ஹேமா, வெங்கட் உள்ளிட்டோர் இந்த சீசன்களும் நடித்து வருகின்றனர். புது முகங்களாக ஷாலினி, சரண்யா, நிரோஷா உள்ளிட்ட முக்கிய பிரபலங்களும் இந்த சீரியலில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் சீரியல்களில் இவர்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் குறித்த முக்கிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலினுக்கு ஒரு நாளுக்கு 15 ஆயிரம் வரை சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறதாம்.

முதல் மகனாக சரவணன் கேரக்டரில் நடிக்கும் விஜே கதிருக்கு 7000 சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறதாம். இரண்டாவது மகனாக செந்தில் கேரக்டரில் நடிக்கும் வெங்கட்டுக்கு பத்தாயிரம் சம்பளமும், மூன்றாவது மகனாக கதிர் கேரக்டரில் நடிக்கும் ஆகாஷுக்கு ஏழாயிரமும் சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது.

முதல் மருமகளாக நடிக்கும் சரண்யாவிற்கு 12 ஆயிரமும், மருமகளாக நடிக்கும் ஹேமாவிற்கு பத்தாயிரமும், மூன்றாவது மருமகளாக நடிக்கும் ஷாலினிக்கு ஐந்தாயிரமும் சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறதாம். இதில் அதிகபட்சமாக கோமதி கேரக்டரில் நடிக்கும் நிரோஷாவிற்கு 18 ஆயிரம் வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

Tags:    

Similar News