ஷங்கருக்கு பிடிக்காத கிளைமேக்ஸை வைக்க சொன்ன கதாசிரியர்… கடைசியில் படம் என்னாச்சு தெரியுமா?

ஷங்கர் இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர். தற்போது கமல்ஹாசனை வைத்து “இந்தியன் 2” திரைப்படத்தையும் தெலுங்கில் ராம் சரணை வைத்து “கேம் சேஞ்சர்” திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் ஷங்கரிடம் ஒரு கதாசிரியர் அவருக்கு பிடிக்காத கிளைமேக்ஸை வைக்க சொல்லியிருக்கிறார். அத்திரைப்படம் கடைசியில் என்ன ஆனது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். ஷங்கருக்கு பிடிக்காத கிளைமேக்ஸ் கடந்த 2005 ஆம் ஆண்டு ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் “அந்நியன்”. […]

Update: 2023-06-07 10:16 GMT

Shankar

ஷங்கர் இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர். தற்போது கமல்ஹாசனை வைத்து “இந்தியன் 2” திரைப்படத்தையும் தெலுங்கில் ராம் சரணை வைத்து “கேம் சேஞ்சர்” திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் இயக்குனர் ஷங்கரிடம் ஒரு கதாசிரியர் அவருக்கு பிடிக்காத கிளைமேக்ஸை வைக்க சொல்லியிருக்கிறார். அத்திரைப்படம் கடைசியில் என்ன ஆனது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

ஷங்கருக்கு பிடிக்காத கிளைமேக்ஸ்

Anniyan

கடந்த 2005 ஆம் ஆண்டு ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் “அந்நியன்”. இத்திரைப்படத்தில் விக்ரம், அம்பி, ரெமோ, அந்நியன் ஆகிய மூன்று கெட்டப்களில் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். இதில் விக்ரமிற்கு ஜோடியாக சதா நடித்திருந்தார். மேலும் விவேக், பிரகாஷ் ராஜ் போன்ற பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் வெளிவந்த சமயத்தில் மிகப் பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

“அந்நியன்” திரைப்படத்திற்கு பிரபல எழுத்தாளர் சுஜாதா வசனம் எழுதியிருந்தார். இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குனர்களுடன் வசனக்கர்த்தாவாக பணியாற்றியிருக்கிறார்.

Sujatha

கிளைமேக்ஸ் ஒர்க் அவுட் ஆனதா?

“அந்நியன்” திரைப்படத்தில் Dissociative identity disorder மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் விக்ரம், கிளைமேக்ஸில் அந்த மனநோயில் இருந்து குணமடைவது போல் காட்டுவார்கள். ஆனால் அவர் குணமடைந்திருக்க மாட்டார். இவ்வாறு கடைசியில் ஒரு டிவிஸ்ட்டுடன் முடிப்பார்கள். இந்த கிளைமேக்ஸில் ஷங்கருக்கு உடன்பாடு இல்லையாம். ஆனால் எழுத்தாளர் சுஜாதா இந்த கிளைமேக்ஸ் நிச்சயம் ஒர்க் அவுட் ஆகும் என கூறினாராம். அதன்படி அந்த கிளைமேக்ஸ் ஒர்க் அவுட் ஆகிவிட்டது. ஆனாலும் ஷங்கருக்கு அந்த கிளைமேக்ஸில் உடன்பாடே இல்லையாம்.

இதையும் படிங்க: 20 வருடங்களுக்கு பிறகு அந்த ஒரு மேஜிக்! ‘தளபதி68’ படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் நடிகை

Tags:    

Similar News