கதையில் கன்வின்ஸ் ஆகாத சங்கர்! தேடி வந்த படத்தை நிராகரிச்சு தேசிய விருதை கைவிட்டுடீங்களே

Director Shankar:  இந்திய சினிமாவையே ஒரு கட்டத்தில் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் சங்கர். ராஜமௌலி, பிரசாந்த் நீல் போன்றவர்கள் இப்ப கொண்டாடிக் கொண்டு வருகின்றோம். ஆனால் இவர்களையும் விட முன்பே அந்த பிரம்மாண்டத்தை தன் படங்களில் கொண்டு வந்தவர் சங்கர். டெக்னாலஜி சரிவர இல்லாத காலகட்டத்தில் கூட படத்தை மிகவும் பிரம்மாண்டமாக எடுத்து இந்திய சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறினார். ஜெண்டில்மேன், முதல்வன், சிவாஜி, எந்திரன், 2.0 போன்ற பல பிரம்மாண்ட படைப்புகளை […]

By :  Rohini
Update: 2023-11-11 00:24 GMT

shankar

Director Shankar: இந்திய சினிமாவையே ஒரு கட்டத்தில் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் சங்கர். ராஜமௌலி, பிரசாந்த் நீல் போன்றவர்கள் இப்ப கொண்டாடிக் கொண்டு வருகின்றோம். ஆனால் இவர்களையும் விட முன்பே அந்த பிரம்மாண்டத்தை தன் படங்களில் கொண்டு வந்தவர் சங்கர்.

டெக்னாலஜி சரிவர இல்லாத காலகட்டத்தில் கூட படத்தை மிகவும் பிரம்மாண்டமாக எடுத்து இந்திய சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறினார். ஜெண்டில்மேன், முதல்வன், சிவாஜி, எந்திரன், 2.0 போன்ற பல பிரம்மாண்ட படைப்புகளை கொடுத்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தார் சங்கர்.

இதையும் படிங்க: சந்திரமுகி 2 எஃபெக்ட்!.. முதல் நாளில் கல்லா கட்டாத ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. வசூல் இவ்ளோ தானா?..

இந்த நிலையில் இயக்குனர் பாண்டிராஜ் சங்கர் குறித்து ஒரு தகவலை கூறியிருக்கிறார். பாண்டிராஜ் ‘பசங்க’ திரைப்படத்தின் மூலம் முதன்முதலில் இயக்குனராக அறிமுகமானார். அந்தப் படத்தை தயாரித்தது நடிகர் சசிகுமார் நிறுவனம் தான்.

ஆனால் பசங்க திரைப்படத்தை முதலில் தயாரிக்க இருந்தது இயக்குனர் சங்கர்தானாம். பசங்க திரைப்படத்தின் கதையை சங்கரிடம் பாண்டிராஜ் போய் சொல்லியிருக்கிறார். கதையை கேட்டுவிட்டு சங்கர் 33 இடத்தில் சிரித்தாராம்.

இதையும் படிங்க: அஜித் படத்தை இயக்க விஜயிடம் அனுமதி கேட்ட இயக்குனர்!. இப்படியெல்லாம் நடக்குமா?!…

இதையெல்லாம் பாண்டிராஜ் குறித்துவைத்துக் கொண்டாராம். இருந்தாலும் கதையில் சங்கர் கன்வின்ஸ் ஆகவில்லையாம். இந்தப் படத்தை தயாரிக்க தயங்கியிருக்கிறார். இதை தெரிந்து கொண்ட பாண்டிராஜ் நேராக சசிக்குமாரிடம் செல்ல அவர் தயாரிக்க முன்வந்திருக்கிறார்.

சுப்பிரமணியபுரம் படம் வெளியாகி சசிகுமார் மிகவும் பிரபலமாக இருந்த நேரம். அந்தப் படத்திற்கு பிறகு பசங்க படத்தை தயாரித்திருக்கிறார் சசிகுமார். பசங்க படம் மூன்று தேசிய விருதுகளை தட்டிச் சென்ற படமாக அமைந்தது.

இதையும் படிங்க: ஒரு பேட்டி கொடுத்து வாய்ப்பு பிடித்த டைரக்டர்… தளபதி69ஐ இயக்க போவது இவர் தானா..?

ஜேம்ஸ் வசந்தன் இசையில் வெளியான இந்த பசங்க திரைப்படம் ஏராளமான சினிமா விருதுகளை ரிலீஸ் நேரத்தில் தக்க வைத்துக் கொண்டது.

Tags:    

Similar News