ஒன்று இல்ல இரண்டு முறை ஷங்கர் கதைக்கு நோ சொன்ன டாப் நடிகர்!... மிஸ்டர் பிரம்மாண்டத்துக்கே இந்த நிலைமையா?
Shankar: தமிழ் சினிமாவில் பிரம்மாண்டம் இயக்குனர் ஷங்கர். அவரின் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என பல பெரிய நடிகர்கள் ஆசைப்பட்டு வருகின்றனர். ஆனால் ஒரு நடிகர் ஷங்கர் கதையையே ரிஜெக்ட் செய்து இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கோலிவுட் ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஷங்கர். அவரின் ஒவ்வொரு படமும் மிகப்பெரிய பட்ஜெட்டில் அமையும். இதனால் அவருக்கு மிஸ்டர் பிரம்மாண்டம் என்ற செல்லப் பெயர் கூட கோலிவுட் வட்டாரத்தில் நிலவி வருகிறது. ரஜினியை வைத்து எந்திரன், விக்ரமை வைத்து அந்நியன், ஐ, அர்ஜீனை வைத்து முதல்வன் போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் சங்கர்.
இதையும் படிங்க: ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பார் போலயே? விவகாரத்துக்கான காரணம் பற்றி மனம் திறந்த சரத்குமாரின் முதல் மனைவி
ஷங்கரின் இயக்கத்தில் தற்போது கமலின் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. படத்தின் நீளம் கருதி இப்படமும் இரண்டு பாகங்களாக வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. நிறைய தடங்கல்ளை தாண்டி இந்தியன் 2 திரைப்படம் இந்தாண்டு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல தெலுங்கு திரையுலகில் டாப் ஸ்டார் ஆக இருக்கும் ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார்.
கிட்டத்தட்ட இப்படத்தின் இறுதி கட்ட வேலைகள் நடந்து வருவதால் இந்தாண்டே ரிலீஸ் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கிறது. கிட்டத்தட்ட பல மொழியின் டாப் ஸ்டார்கள், ஷங்கரின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என ஆர்வம் காட்டி வரும் விஷயத்தை தான் பார்த்திருக்கிறோம். ஆனால் முன்னணி நடிகரான மகேஷ் பாபு ஷங்கரை ரிஜெக்ட் செய்ததாக அதிர்ச்சிகரமான தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: ஜேசன் சஞ்சய் இயக்க இருக்கும் படத்தில் தமிழ் ஹீரோ இல்லையா? அக்கட தேசத்தில் இருந்து தூக்கப்பட்ட சூப்பர்ஸ்டார்..!