சிம்புவின் புது அவதாரம்.. இனிமே வண்டி நிக்காது.. வேற லெவல் பெர்ஃபார்ம்தான்

By :  ROHINI
Update: 2025-05-23 07:37 GMT

simbu

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று ஒரு சூப்பர் ஸ்டாராக வளர்ந்து நிற்கிறார் நடிகர் சிம்பு. தற்போது தக் லைஃப் படத்தில் கமலுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சிம்பு. டிரெய்லரில் பார்க்கும் போது அனைவருக்குமே ஆச்சரியம். ஏனெனில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக சிம்புவின் படங்கள் வெளியாக நிலையில் இத்தனைஆண்டுகள் காத்திருப்புக்கு கிடைத்த பலன் என்பது போல் டிரெய்லர் அமைந்துள்ளது.

சிம்புவின் ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாகவே இது இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த நிலையில் படத்தை பற்றி பெரிய அளவில் படக்குழு ப்ரோமோட் செய்து வருகின்றனர். சமீபத்தில் கே.எஸ்.ரவிக்குமாருடனான நேர்காணலில் பல விஷயங்களை பகிர்ந்திருக்கின்றனர். அப்போது கே.எஸ்.ரவிக்குமார் சிம்புவை பார்த்து ‘வரலாறு படம் பார்த்தீங்களா? அதுல ஒரு ஃபெமினைன் கேரக்டர் இருக்கும்.’

‘அது போல நீங்கள் நடிக்க போறதா ஒரு பேச்சு வருகிறதே’ என கேட்டார். அதற்கு சிம்பு ‘ஆமா. அந்த மாதிரி ஒரு விஷயம் போய்க்கிட்டு இருக்கு. அதை பற்றி கமல் சார்கிட்டயும் டிஸ்கஸ் பண்ணேன்.’ என்று கூறினார் சிம்பு. ஒருவேளை சிம்புவின் அடுத்த படத்தில் அந்த மாதிரியான கேரக்டரில் நடிக்க போகிறாரா என்று தெரியவில்லை. அப்படி ஃபெமினைன் கேரக்டரில் நடித்து புகழ்பெற்றவர்கள் சிவாஜி, கமல், அஜித்தை குறிப்பிடலாம்..

எத்தனையோ நடிகர்கள் நடித்திருந்தாலும் அவர்கள் எல்லாருமே காமெடிக்காகவோ அல்லது ஒரு காட்சிக்காகவோத்தான் பண்ணியிருப்பார்கள். ஆனால் சிவாஜி, கமல், அஜித் எல்லாருமே படமுழுக்க அப்படித்தான் நடித்திருப்பார்கள். இப்பொழுது அந்த லிஸ்ட்டில் சிம்புவும் இணையப்போகிறார். அதனால் இனிமேல் சிம்பு கதையை தேர்ந்தெடுத்து நடித்து வந்தால் நிச்சயமாக சினிமாவில் அவருக்கு என ஒரு தனி இடம் காத்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Tags:    

Similar News