மீனாவை திட்டிய விஜயா.. ஒரே வார்த்தையில் அடக்கிய பார்வதி… இதாது உடனே முடிஞ்சிதே..!
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ரவி நான் மட்டுமா எனக் கேட்க விஜயா உன் பொண்டாட்டியும் சேர்த்து தான் சொல்றேன். அவளையும் வீட்டுக்கு அழைச்சிட்டு வா என்கிறார். ஆனால் ரவியோ நான் வீட்டுக்கு வந்தால் முத்து கோபப்படுவானே எனக் கேட்கிறார்.
அதையே தான் நானும் யோசிக்கிறேன். அவன் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வா எனச் சொல்லிவிட்டு செல்கிறார். இதையடுத்து மீனா பைனான்சியரிடம் பேச காத்து இருக்கிறார். ஆனால் ரொம்ப நேரம் வெயிட் செய்தும் அவர் மீனாவிடம் பேசவில்லை. அவர் வீட்டுக்கு கிளம்பும்போது மீனா உங்கள பாக்க தான் வெயிட் செய்தேன். என் புருஷன் கார் கிடைக்காம ரொம்ப கஷ்டப்படுறாரு. நீங்க தான் உதவி செய்யணும் எனக் கெஞ்சுகிறார்.
இதையும் படிங்க: டேய் ஏன் ஓடுற?.. இதலாம் என்ஜாய் பண்ணு!.. சங்கடத்தில் நெளிந்த ரஜினிக்கு சிவாஜி சொன்ன அட்வைஸ்…
அதற்கு பைனான்சியரோ உன் புருஷனுக்கு கார் கொடுக்க முடியாது. அவன் கஷ்டப்படட்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். அப்போ அங்கிருக்கும் ஒருவர் வீட்டில் போய் பாருமா என அட்வைஸ் செய்கிறார். அடுத்து அண்ணாமலை வீட்டில் சாப்பிட சாப்பாட்டை போட்டு உட்கார்கிறார்.
அந்த நேரத்தில் முத்து வர அவருக்கு கதவை திறந்து விட்டு சாப்பிட வா என அழைக்கிறார். முத்து சாப்பாடு போட போக அவருக்கு குழம்பில் இருந்த பல்லி வந்து விடுகிறது. இதனால் அதிர்ச்சி ஆகும் அவர் அண்ணாமலையை சாப்பிடாமல் தடுத்து விடுகிறார். வீட்டுக்கு விஜயாவும் பார்வதியும் வருகின்றனர். அப்போ முத்து அப்பாவை தனியா விட்டுட்டு எங்க போனீங்க? குழம்புல பல்லி விழுந்து இருக்கு எனக் கூறுகிறார்.
நல்ல வேலை அப்பா சாப்பிடறதுக்குள்ள நான் வந்து தட்டி விட்டுட்டேன் என்று சொல்கிறார். அதற்கு விஜயா என்ன ஏன் சொல்ற? உன் பொண்டாட்டி தான் சமைச்சா என சொல்லும் பொழுது மீனாவும் வீட்டிற்குள் வருகிறார். அவரை பார்த்த விஜயா சாப்பாட்டில் பல்லி விழுந்து இருக்கு. எல்லாரையும் கொல்லவா பார்க்கிற எனத் திட்டுகிறார். மீனா இல்லையே நான் மூடி வச்சிட்டு தான் போனேன் என்கிறார்.
இதையும் படிங்க: பாக்கியாவுக்கு நேரம் சரியில்லை போல… காண்ட்ராக்ட்டில் வந்த பிரச்னை.. கோபி சபதம் ஜெயிச்சிட்டோ..?
அண்ணாமலை யாருக்கும் ஒன்னும் ஆகலை தானே என அவரை அடக்கி விடுகிறார். பின்னர் பார்வதி விஜயாவை ரூமுக்குள் இழுத்து செல்கிறார். வந்துள்ளார். நாமளும் அந்த சாப்பாட்டை தான் சாப்பிட்டோம். மீனா குழம்பை மூடி தான் வச்சா? நீ தான் குழம்ப திறந்து போட்டுட்ட அதுக்கப்புறம் தான் பல்லி விழுந்திருக்கும்.
அதனால் தான் வெளியில் எதுவும் சொல்லலை. இல்ல கத்தி உன் பக்கம் திரும்பி இருக்கும். விஜயா அட ஆமா நான் தான் மறந்துட்டேன். ஆனா வெளியில ஒத்துக்க முடியாது. சரி பரவால்ல விடு என்றார். இதையடுத்து வீட்டுக்கு வரும் ரவி, ஸ்ருதியிடம் அம்மா வந்து சென்ற தகவலை கூறி சந்தோஷப்படுவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.