முரண்டு பண்ணாதீங்க முத்து… உண்மை தெரிஞ்சா வருத்தப்படுவீங்க.. ரோகினிக்கு வரும் ஆப்பு..!
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மீனாவுக்கும் முத்துவுக்கும் இருக்கும் பிரச்னை ஊதிக்கொண்டு இருக்கிறார் விஜயா. என் புருஷனுக்காக தான் பூரி செஞ்சேன் என மீனா சொல்ல இவ வேணும்னே தான் பண்ணுறா. இந்த எண்ணெய் சாப்பாடை சாப்பிட்டு நான் இன்னும் குண்டாகி எனக்கும் நெஞ்சு வலி வரணுமா என்கிறார். இதனால் ரோகினிக்கே சிரிப்பு வர பூசுன மாதிரி இருக்கேன் எனக் கூறி சமாளிக்கிறார். இதை தொடர்ந்து அங்கு வரும் முத்துவை சாப்பிட சொல்கிறார் அண்ணாமலை. இதையும் படிங்க: ஒரே […]
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மீனாவுக்கும் முத்துவுக்கும் இருக்கும் பிரச்னை ஊதிக்கொண்டு இருக்கிறார் விஜயா. என் புருஷனுக்காக தான் பூரி செஞ்சேன் என மீனா சொல்ல இவ வேணும்னே தான் பண்ணுறா.
இந்த எண்ணெய் சாப்பாடை சாப்பிட்டு நான் இன்னும் குண்டாகி எனக்கும் நெஞ்சு வலி வரணுமா என்கிறார். இதனால் ரோகினிக்கே சிரிப்பு வர பூசுன மாதிரி இருக்கேன் எனக் கூறி சமாளிக்கிறார். இதை தொடர்ந்து அங்கு வரும் முத்துவை சாப்பிட சொல்கிறார் அண்ணாமலை.
இதையும் படிங்க: ஒரே நாளில் பேரைக் கெடுத்துக்கிட்ட கமல்! லெஃப்ட் ரைட் வாங்கிய பிரபலம் – மூஞ்சியை எங்க வைப்பாருனு தெரியலயே
மீனாவால அவன் எவ்வளவோ கஷ்டப்பட்டான். அவ செஞ்சத எப்படி சாப்பிடுவான் எனக் கூறுகிறார். முத்துவும் எனக்கு நேத்து வரை பூரி பிடிச்சது. இன்னைக்கு எனக்கு எதுவும் பிடிக்கலை எனக் கூறி விடுகிறார். இதையடுத்து முத்துவை அண்ணாமலை சாப்பிட சொல்கிறார்.
அவர் பேச்சை தட்ட முடியாமல் சாப்பிட உட்காருகிறார். ஆனால் விஜயா அவன் எப்படி சாப்பிடுவான். இவள் தான் நீங்க ஸ்டேஷனுக்கு போனீங்க.. ஹாஸ்பிடல் போனீங்க என ஏற்றி விடுகிறார். இதனால் முத்துவுக்கு கோபம் வர சாப்பிடாமல் எழுந்து சென்று விடுகிறார்.
இதையடுத்து மனோஜ் சாப்பிட உட்கார ரோகினி காலையில் எதை எல்லாம் சாப்பிட கூடாது. உனக்கு ஏபிசி ஜூஸ் போட்டு தரேன் எனக் கூறி அழைத்து செல்கிறார். அதற்கு மனோஜ் அதுக்கெல்லாம் லேட்டாகும். நான் இப்போ இதை சாப்பிட்டு விடுகிறேன் எனக் கூற ரோகினி வலுக்கட்டாயமாக அழைத்து செல்கிறார்.
இதையும் படிங்க: லைஃப்பை தொலைச்சிட்டியே ரத்னா!.. கழுகை பகைச்ச காக்காவுக்கே அந்த அடின்னா.. காக்கா குஞ்சுக்கு?..
இதையடுத்து ரவி வீட்டில் இருக்க ஸ்ருதி ஷாப்பிங் போயிட்டு வந்ததாக கூறுகிறார். மேலும் ரவி நகை எடுத்துக்கொண்டு வரும் ஸ்ருதி நாம தான் இனி ஒரு குடும்பம் எனச் சொல்லி சந்தோஷப்படுகிறார். ரவி தன் குடும்பத்தினை நினைத்து வருந்த அவரை சமாதானப்படுத்துகிறார்.
முத்துவுக்கு சவாரி இல்லாமல் படுத்து இருக்க செல்வத்திடம் கார் கை மீறிப்போச்சு, எந்த சவாரியும் இல்லை. பைனான்ஸ்காரன் காசுக்காக போன் பண்ணிக்கிட்டே இருக்கான் எனப் புலம்பிக்கொண்டு இருக்கிறார். அப்போ முத்து காரை வாங்கியவர் வந்து டாக்குமெண்ட்டை கேட்கிறார். பின்னர் அவரிடம் முத்து காரை கடைசியாக ஓட்டி பார்க்கலாமா எனக் கேட்டு அனுமதியுடன் ஓட்டி பார்க்கிறார்.
காரை தடவி பார்த்து மனம் வெதும்புகிறார். இதையடுத்து குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் முத்துவை பார்த்து ஏன் இப்படி குடிச்சிருக்கீங்க எனக் கேட்கிறார் மீனா. எல்லாம் உன்னால தான். என் கார் போச்சு, அப்பாவுக்கு இப்படி ஆச்சு. உன்னை மன்னிக்கவே மாட்டேன் எனக் கூறுகிறார். மீனா வருந்துவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.
நாளை வெளியாக இருக்கும் காட்சியில், ரோகினிக்கு கொரியர் வந்து இருப்பதாக மீனா கூறுகிறார். இதையடுத்து அங்கு வரும் ரோகினிக்கு ஷாக் கொடுக்கிறார் பிஏ. நாளைக்குள் 50 ஆயிரம் கொண்டு வந்து விடு. இல்லை உன்னை பற்றி சொல்லி விடுவேன் என அவர் சொல்கிறார். இதை மீனா பார்த்து விடுவது போல காட்டப்படுகிறது.