கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள்!. கட்டியணைத்து கண்ணீர் விட்ட நடிகர் திலகம்!...

1960களில் தமிழ் சினிமாவின் முக்கிய பாடலாசிரியராக வலம் வந்தவர் கவிஞர் கண்ணதாசன். பத்திரிக்கையாளர், கதாசிரியர், வசன கர்த்தா, பாடலாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் என பல அவதாரங்களை எடுத்தவர் இவர். 60களில் முக்கிய நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன் உள்ளிட்ட பலருக்கும் பல திரைப்படங்களில் பாடல்களை எழுதியவர் இவர். எம்.ஜி.ஆருக்கு அவரின் துவக்க காலத்தில் நடித்த படங்களில் கதை, வசனங்களை கண்ணதாசன் எழுதி இருக்கிறார். நாடோடி மன்னன் படத்தில் கூட வசன பிரிவில் […]

Update: 2024-06-12 00:23 GMT

1960களில் தமிழ் சினிமாவின் முக்கிய பாடலாசிரியராக வலம் வந்தவர் கவிஞர் கண்ணதாசன். பத்திரிக்கையாளர், கதாசிரியர், வசன கர்த்தா, பாடலாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் என பல அவதாரங்களை எடுத்தவர் இவர். 60களில் முக்கிய நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன் உள்ளிட்ட பலருக்கும் பல திரைப்படங்களில் பாடல்களை எழுதியவர் இவர்.

எம்.ஜி.ஆருக்கு அவரின் துவக்க காலத்தில் நடித்த படங்களில் கதை, வசனங்களை கண்ணதாசன் எழுதி இருக்கிறார். நாடோடி மன்னன் படத்தில் கூட வசன பிரிவில் வேலை செய்திருக்கிறார். எம்.ஜி.ஆரின் அபிமானத்தை பெற்ற கவிஞராக கண்ணதாசன் இருந்தார். கண்ணதாசன் போல சூழ்நிலைக்கு பாடல் எழுதும் கவிஞர் யாருமில்லை என்கிற நிலைதான் அப்போது இருந்தது. அவருக்கு பின் வந்தவர்தான் கவிஞர் வாலி.

இதையும் படிங்க: சிவாஜிக்கு ‘நடிகர் திலகம்’ பட்டம் கொடுத்தது யாருன்னு தெரியுமா? இவ்ளோ விஷயங்கள் நடந்திருக்கா?

எம்.ஜி.ஆருக்கு வீரதீர மற்றும் காதல் பாடல்களை எழுதிய கண்ணதாசன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பல காதல் மற்றும் தத்துவ பாடல்களை எழுதி இருக்கிறார். சட்டி சுட்டதா கை விட்டதடா, ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு என பல பாடல்களை சொல்லலாம்.

கண்ணதாசனோடு சில சமயங்களில் நடிகர் திலகம் சிவாஜி சண்டை போட்டாலும் இருவருக்குமான நட்பில் விரிசல் ஏற்படவில்லை. சில மாதங்கள் இருவரும் பேசாமல் கூட இருந்திருக்கிறார்கள். ஆனால், சோக போட்டு வேண்டுமெனில் கண்ணதாசனிடம்தான் போக வேண்டும் என்கிற நிலை இருந்ததால் கண்ணதாசனை யாராலும் தவிர்க்க முடியவில்லை.

சிவாஜி கணேசன், சரோஜா தேவி நடித்து 1961ம் வருடம் வெளிவந்த திரைப்படம்தான் பாலும் பழமும். ஏ.பீம்சிங் இப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தின் பாடல் கம்போசிங் சிவாஜியின் அன்னை இல்லத்தில் நடந்தது. ஒரு பாடலை கண்ணதாசன் எழுதிவிட்டு வீட்டுக்கு போய்விட்டார். ஷுட்டிங்கிலிருந்து வீட்டுக்கு போன சிவாஜி கண்ணதாசனின் பாடல் வரிகளை படித்துப்பார்த்தார். அப்போது இரவாகிவிட்டது.

உடனே, தொலைபேசியில் கண்ணதாசானை அழைத்து ‘உன்னை இப்போது பார்க்க வேண்டும்’ என சொல்ல கண்ணதாசனோ ‘இப்போது என்ன?.. காலையில் சந்திக்கலாம்’ என சொல்ல, சிவாஜியோ ‘இப்போது நீ வருகிறாயா? இல்லை நான் வரட்டுமா?’ என கேட்டிருக்கிறார்.

‘நானே வருகிறேன்’ என சிவாஜியின் வீட்டுக்கு போயிருக்கிறார் கண்ணதாசன். அவருக்காக காத்திருந்த சிவாஜி கண்ணதாசன் வந்ததும் அவரை கட்டியணைத்து பாராட்டி இருக்கிறார். அப்போதும் அவர் கண்களில் கண்ணீரும் வழிந்தது. அப்படி சிவாஜி பாராட்டிய பாடல்தான் ‘என்னை யாரென்று எண்ணி நீ பார்க்கிறாய்’ பாடல்’ என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News