சிவாஜி படத்தை ரீமேக் செய்து கையை சுட்டுக்கொண்ட துயரம்... அட தயாரிப்பாளர் அந்த நடிகரா?..

தமிழ்த்திரை உலகில் எம்ஜிஆர் படங்களில் வில்லனாக ஜொலித்தவர் பி.எஸ்.வீரப்பா. இவரது கம்பீரமான குரல், ஆஜானுபாகுவான தோற்றம் நம்மை பயமுறுத்தி விடும். இவர் பேரைச் சொன்னாலே நமக்கு எம்ஜிஆர் நடித்த மகாதேவி படத்தில் இவர் பேசும் 'மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி' என்ற வசனம் தான் இன்னும் நினைவுக்கு வரும். இவர் நடிகர் மட்டுமல்லாமல் படமும் தயாரித்துள்ளார். அப்படி ஒரு படம் தயாரித்து அதை இந்தியில் எடுக்க கையை சுட்டுக்கொண்ட அனுபவமும் அரங்கேறியுள்ளது. வாங்க பார்க்கலாம். பி.எஸ்.வீரப்பா முதன்முறையாக […]

By :  sankaran v
Update: 2024-06-26 07:30 GMT

Sivaji

தமிழ்த்திரை உலகில் எம்ஜிஆர் படங்களில் வில்லனாக ஜொலித்தவர் பி.எஸ்.வீரப்பா. இவரது கம்பீரமான குரல், ஆஜானுபாகுவான தோற்றம் நம்மை பயமுறுத்தி விடும்.

இவர் பேரைச் சொன்னாலே நமக்கு எம்ஜிஆர் நடித்த மகாதேவி படத்தில் இவர் பேசும் 'மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி' என்ற வசனம் தான் இன்னும் நினைவுக்கு வரும். இவர் நடிகர் மட்டுமல்லாமல் படமும் தயாரித்துள்ளார். அப்படி ஒரு படம் தயாரித்து அதை இந்தியில் எடுக்க கையை சுட்டுக்கொண்ட அனுபவமும் அரங்கேறியுள்ளது. வாங்க பார்க்கலாம்.

பி.எஸ்.வீரப்பா முதன்முறையாக சிவாஜியை ஹீரோவாக வைத்து 'ஆலயமணி' படத்தைத் தயாரித்தார். அதே போல சிவாஜி நடிக்க கே.சங்கர் இயக்கிய முதல் படமும் இதுதான். இவர் சிவாஜி உடனான தனது அனுபவங்களை இப்படி கூறுகிறார்.

Aalayamani

ஆலயமணி படத்தை ஒரு மகாகாவியம் என்றே சொல்லலாம். இந்தப் படத்தின் வெற்றிக்கு அந்தக் காவிய நாயகன் தான் முக்கிய காரணம். இந்தப் படம் திருவனந்தபுரத்தில் படமாக்கப்பட்டது. அப்போது எஸ்எஸ்.ராஜேந்திரன் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறையில் இருந்தார்.

மிகவும் கஷ்டப்பட்டு ஒரு வாரம் அவரை ஜாமினில் எடுத்தோம். அப்போது அந்த நாள்களில் இரவு பகலாக படப்பிடிப்பு நடத்தினார்கள். 6 நாள்கள் இரவு பகலாக சிவாஜி நடித்தார்.

இந்தப் படத்தில் வரும் பொன்னை விரும்பும் பூமியிலே, சட்டி சுட்டதடா பாடல்கள் காலத்தால் அழியாதவை. சட்டி சுட்டதடா பாடலுக்கு அன்றைய அரசியல் சூழலில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததாம். எல்லாவற்றையும் தாண்டி படம் வெற்றிக் கொடியை நாட்டியது.

ஆலயமணி படத்தை இந்தியில் எடுக்க அதன் உரிமைத் தொகையாக 5 லட்சத்தை பி.எஸ் வீரப்பாவிடம் தயாரிப்பாளர் கொடுப்பதாகக் கூறினார். அது மட்டுமல்லாமல் 'முதல் போட வேண்டாம். வரும் லாபத்தில் ஆளுக்குப் பாதி எடுத்துக் கொள்ளலாம்' என்றாராம்.

இதையும் படிங்க... நாளைக்கு ரிலீஸ்.. ரீல காணோம் கதையா இருக்கு ‘கல்கி’ படத்தோட நிலைமை! என்ன மேட்டர் தெரியுமா?

அதை வீரப்பாவின் நண்பர் தடுத்துவிட்டார். 'இந்தக் கதையை நீங்களே நேரடியாக இந்தியில் தயாரித்தால் அதிக லாபத்தை ஈட்டலாம்' என அவர் ஐடியா கூறினாராம். அதனால் திலீப்கானை ஹீரோவாகப் போட்டு ஆத்மி என்ற பெயரில் இந்தியில் தயாரித்தார் வீரப்பா. படம் படு பிளாப் ஆனது.

Tags:    

Similar News