நானும் எம்.ஜி.ஆரும் பெரிய தப்பு பண்ணிட்டோம்!. பல வருடங்கள் கழித்து ரஜினியிடம் சொன்ன சிவாஜி..

Sivaji Ganesan: தமிழ் சினிமாவிலும், ரசிகர்கள் மனதிலும் இப்போதும் நடிகர் திலகமாக வாழ்பவர் சிவாஜி கணேசன். சிறுவனாக இருக்கும்போதே நாடங்களில் நடிக்க துவங்கி பின்னர் பராசக்தி படம் மூலம் ஹீரோவாக மாறி தொடர்ந்து பல கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். எம்.ஜி.ஆருடன் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்தார். அதன்பின் இருவரும் வெவ்வேறு பாதைக்கு போய்விட்டனர். தனக்கு போட்டி நடிகராக இருந்தாலும் ‘சிவாஜியே சிறந்த நடிகர்’ என பல மேடைகளிலும் எம்.ஜி.ஆர் சொல்லி இருக்கிறார். எம்.ஜி.ஆர் […]

Update: 2024-02-07 08:12 GMT

Sivaji Ganesan: தமிழ் சினிமாவிலும், ரசிகர்கள் மனதிலும் இப்போதும் நடிகர் திலகமாக வாழ்பவர் சிவாஜி கணேசன். சிறுவனாக இருக்கும்போதே நாடங்களில் நடிக்க துவங்கி பின்னர் பராசக்தி படம் மூலம் ஹீரோவாக மாறி தொடர்ந்து பல கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்.

எம்.ஜி.ஆருடன் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்தார். அதன்பின் இருவரும் வெவ்வேறு பாதைக்கு போய்விட்டனர். தனக்கு போட்டி நடிகராக இருந்தாலும் ‘சிவாஜியே சிறந்த நடிகர்’ என பல மேடைகளிலும் எம்.ஜி.ஆர் சொல்லி இருக்கிறார். எம்.ஜி.ஆர் அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்தார் என்றால் சிவாஜியோ நல்ல கதையம்சம் கொண்ட, செண்டிமெண்ட் காட்சிகள் அதிகம் இருக்கும் கதைகளில் நடிப்பார்.

இதையும் படிங்க: இனிமே நான் நடிக்க மாட்டேன்!.. சிவாஜி படத்தின் படப்பிடிப்பிலிருந்து வெளியேறிய பானுமதி…

70களுக்கு பின் எந்த ஈகோவும் இல்லாமல் பல நடிகர்களுடன் இணைந்தும் சிவாஜி நடித்திருக்கிறார். நடிகர் ரஜினிக்கு சிவாஜி மீது அதிக மரியாதையும், அன்பும் உண்டு. ரஜினி வளர்ந்து வரும் நேரத்தில் கூட சிவாஜி அவருடன் இணைந்து ‘நான் வாழ வைப்பேன்’ என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியே ரஜினியை வைத்தே நகரும்.

இந்த படத்தில் ரஜினி நடித்த சில காட்சிகளை கட் பண்ணிவிடலாம் என இயக்குனர் நினைத்தபோது ‘அவன் நல்லா பண்ணி இருக்கான். அவனும் வளரும் நடிகன்தான். எனக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக அவன் நடித்த காட்சிகளை கட் பண்ண வேண்டும். அது அப்படியே இருக்கட்டும்’ என பெருந்தன்மையுடன் சொன்னவர்தான் சிவாஜி.

இதையும் படிங்க: சிவாஜி சினிமா உலகில் காலடி எடுத்து வைக்க காரணமாக இருந்தவர் இந்த நடிகரா? என்ன ஒரு ஆச்சரியம்..!

ரஜினியுடன் விடுதலை, படிக்காதவன், படையப்பா உள்ளிட்ட படங்களில் சிவாஜி நடித்திருக்கிறார். ஒருமுறை ஒரு படப்பிடிப்பில் சிவாஜியிடம் ‘நீங்க எவ்வளவு வெற்றி தோல்விகளையும், லாப நஷ்டங்களையும் பார்த்திருப்பீர்கள். அதில் எதாவது ஒன்றை சரியாக திட்டமிட்டு செய்திருக்கலாம்’ என எப்போதாவது நீங்கள் நினைத்தது உண்டா?’ என ரஜினி கேட்டிருக்கிறார்.

அதற்கு மிகவும் நேர்மையாக பதில் சொன்ன சிவாஜி ‘நானும் எம்.ஜி.ஆரும் போட்டி நடிகர்களாக இருந்த போது மக்களுக்கு யார் அதிக உதவி செய்வது என்கிற போட்டியில் இருவருமே நிறைய செலவு செய்தோம். அதில், கொஞ்சம் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு போனது. நிறைய பணம் வீணானது. அதை சரியாக திட்டமிட்டு சேமித்து வைத்திருந்தால் இப்போது அது பெரிய உதவியாக இருந்திருக்கும் என அவ்வப்போது நான் நினைப்பதுண்டு’ என சொல்லியிருக்கிறார் சிவாஜி.

இதையும் படிங்க: எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி பற்றி இப்படி எல்லாமா பேசினாரு சந்திரபாபு? அதான் அவருக்கு பேட் லக்காச்சா?

Tags:    

Similar News