அவர் முன்னாடி ஹாலிவுட் நடிகர்லாம் சும்மா!.. சிவாஜியே பாராட்டிய நடிகர் யார் தெரியுமா?..

by சிவா |
sivaji
X

sivaji

சிவாஜி இல்லாத திரையுலகை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. திரையுலகுக்கு அவர் செய்த பங்கு அளப்பரியது. பல்வேறு கதாபாத்திரங்களாகவே மாறி ரசிகர்களை கவர்ந்தவர் இவர். பராசக்தி தொடங்கி இவர் நடித்த ஒவ்வொரு திரைப்படமும் ரசிகர்களுக்கு விருந்துதான்.

அவர் இருக்கும்போது சரி, இப்போதும் சரி.. நடிப்புக்கு ரெஃப்ரன்ஸ் எடுக்க வேண்டுமெனில் அது சிவாஜி மட்டுமே. ஏனெனில், நடிப்பில் பல பரிமாணங்களையும் அவர் காட்டியிருக்கிறார். அதனால்தான், அவருக்கு பின்னால் வந்த ரஜினி, கமல் உள்ளிட்ட பல நடிகர்கள் அவரின் ரசிகர்களாக இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: ‘பார்க்கிங்’ படத்தில் அந்த சீன்! சிவாஜி இல்லைனா அத செஞ்சிருக்க முடியாது – பாஸ்கர் சொன்ன சீக்ரெட்

ஆனால், அப்படிப்பட்ட சிவாஜியே ஒரு நடிகரின் ரசிகராக இருந்தார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?.. நடிகர் சத்தியராஜ் சிவாஜியுடன் ஜல்லிக்கட்டு படத்தில் நடித்தபோது ‘உங்களுக்கு இன்ஸ்பிரேசனாக எந்த நடிகராக இருக்கிறாரா?’ என கேட்டார். அதற்கு சிவாஜி ‘என்னடா நான் யாரை காப்பி அடிக்கிறேன்னு கேக்குறியா?’ என கேட்க சத்திராஜோ ‘இல்லப்பா.. சும்மா கேட்டேன்’ என் சொன்னார்.

அதற்கு பதில சொன்ன சிவாஜி ‘எனக்கு எம்.ஆர்.ராதாவை மிகவும் பிடிக்கும். உங்களுக்கு இரட்டை குரலில் மாறி மாறி நடிக்கும் எம்.ஆர்.ராதாவைத்தான் தெரியும். நாடகங்களில் அவரின் நடிப்பை நீங்கள் பார்த்தது கிடையாது. நாடகத்தில் அவர் நடிக்கும் ஸ்டைலை பற்றி சொன்னால் இங்கிலீஸ் நடிகர் கூட அவர் பக்கத்தில் நிற்க முடியாது’ என சொல்லியிருக்கிறார்.

இதையும் படிங்க: விஜயகாந்தை மறந்துபோன சிவாஜி!.. ஆனாலும் நடிகர் திலகத்துக்கு ஆதரவா நின்ன கேப்டன்!..

எம்.ஆர்.ராதாவின் நாடக கம்பெனியில் சிவாஜி இருந்ததால் அப்படி சொல்கிறார் என சத்தியராஜ் நினைத்தாராம். ஆனால், ஒருமுறை மோகன்லாலிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என கேட்டபோது அவர் சொன்ன பெயர் ‘எம்.ஆர்.ராதா’. அப்போதுதான் சிவாஜி உண்மையாகத்தான் சொல்லியிருக்கிறார் என்பது சத்தியராஜுக்கு புரிந்துள்ளது.

mr radha

சிவாஜியின் பல திரைப்படங்களில் எம்.ஆர்.ராதா நடித்திருக்கிறார். ‘அவருடன் நடிக்கும்போது மிகவும் கவனமாக நடிப்பேன். இல்லையேல் தூக்கி சாப்பிட்டுவிடுவார்’ என சிவாஜியே பலமுறை ஊடகங்களில் சொல்லியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எம்ஜிஆரை கிண்டலடித்த சிவாஜி.. பதிலுக்கு புரட்சித்தலைவர் என்ன செய்தார் தெரியுமா?

Next Story