சூர்யா சொந்தக்காரனா சண்டை போடுவீங்க!.. அயலான் தயாரிப்பாளர்னா அடங்கி போவீங்களா சிவகார்த்திகேயன்?
ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்கல் படத்துக்கு தனக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை முழுசா கொடுக்கவில்லை என சண்டை போட்டு வழக்கு வரை சென்று பெரிய பஞ்சாயத்தாக மாறியது. தயாரிப்பாளர்கள் சரியாக சம்பளம் கொடுக்க மாட்றாங்க, என்னை இளிச்சவாயன்னு ஏமாத்துறாங்கனு அழுது புழம்பி தான் சொந்தமா தயாரிப்பு நிறுவனத்தையே சிவகார்த்திகேயன் ஆரம்பித்தார். இதையும் படிங்க: ரெண்டு படம் ஹிட்டுன்னா இப்படியா?!.. ஓவர் சீன் போடும் கவின்!.. அடக்கி வாசிங்க புரோ!.. இப்படியெல்லாம் பெரிய […]
ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்கல் படத்துக்கு தனக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை முழுசா கொடுக்கவில்லை என சண்டை போட்டு வழக்கு வரை சென்று பெரிய பஞ்சாயத்தாக மாறியது.
தயாரிப்பாளர்கள் சரியாக சம்பளம் கொடுக்க மாட்றாங்க, என்னை இளிச்சவாயன்னு ஏமாத்துறாங்கனு அழுது புழம்பி தான் சொந்தமா தயாரிப்பு நிறுவனத்தையே சிவகார்த்திகேயன் ஆரம்பித்தார்.
இதையும் படிங்க: ரெண்டு படம் ஹிட்டுன்னா இப்படியா?!.. ஓவர் சீன் போடும் கவின்!.. அடக்கி வாசிங்க புரோ!..
இப்படியெல்லாம் பெரிய பஞ்சாயத்து சம்பள மேட்டரில் நடந்த நிலையில், ஹீரோ படத்துக்கு பிறகு மீண்டும் கேஜேஆர் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படத்துக்கு சம்பளம் வேண்டாம் என்று சொல்லி விட்டாராம்.
சம்பளம் வேண்டுமா? படம் வேண்டுமா என இரண்டு சான்ஸ் முன் வைக்கப்பட்ட நிலையில், இந்த படத்தின் மீதான நம்பிக்கை மற்றும் இப்படிப்பட்ட ஒரு கனவுத் திரைப்படம் வெளியாக வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்துடன் சிவகார்த்திகேயன் சம்பளம் வேண்டாம் என சொல்லி விட்டதாக சொல்லியிருப்பதை பார்த்த ரசிகர்கள் இது உலகமகா நடிப்புடா சாமி என கமெண்ட் போட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தனுஷை டீலில் விட்ட ராஷ்மிகா மந்தனா!.. அதனாலதான் இப்படி ஆகிப்போச்சோம்!..
ஹீரோ படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், அந்த படத்திற்கு ஈடு செய்யும் விதமாக இந்த படத்தில் சம்பளமே தரமாட்டோம் என நடிக்க சொல்லியிருக்கிறார்கள் சிவகார்த்திகேயனை ஆனால், அவர் எவ்வளவு அழகாக தியாகம் தான் உன்னை உயர்த்தும் என்பது போல பேசி உள்ளார் பாருங்கள் என்று ரசிகர்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று நடைபெற்று வரும் நிலையில், சிவகார்த்திகேயன் என்ன பேசப் போகிறார் என்பது பெரும் ஆவலை கிளப்பி இருக்கிறது.