ரஜினியை நம்பி மோசம் போன இயக்குனர்.. மீண்டும் கை கொடுத்த சிவகார்த்திகேயன்....
சிவகார்த்திகேயன் தற்போது “மாவீரன்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை மடோன்னே அஸ்வின் இயக்கியுள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தை சாந்தி டாக்கீஸ் தயாரிக்க, ரெட் ஜெயன்ட் நிறுவனம் இத்திரைப்படத்தை வெளியிடவுள்ளது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த “அயலான்” திரைப்படம் வருகிற தீபாவளி என்று வெளியாகவுள்ளது. இத்திரைப்படம் ஏலியனை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு வருடங்களுக்கு முன்பே முடிவடைந்தது. […]
சிவகார்த்திகேயன் தற்போது “மாவீரன்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை மடோன்னே அஸ்வின் இயக்கியுள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தை சாந்தி டாக்கீஸ் தயாரிக்க, ரெட் ஜெயன்ட் நிறுவனம் இத்திரைப்படத்தை வெளியிடவுள்ளது.
இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த “அயலான்” திரைப்படம் வருகிற தீபாவளி என்று வெளியாகவுள்ளது. இத்திரைப்படம் ஏலியனை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு வருடங்களுக்கு முன்பே முடிவடைந்தது. ஆனால் இத்திரைப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் அதிகமாக இருந்ததால் இத்திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.
வெற்றி இயக்குனருக்கு நம்பிக்கை கொடுத்த சிவகார்த்திகேயன்
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது தன்னை வைத்து படம் இயக்கிய ஒரு வெற்றி இயக்குனருக்கு கால்ஷீட் தந்துள்ளார். அதுவும் அவருக்கு வாய்ப்புகள் இல்லாத நிலையில் இவ்வாறு செய்துள்ளார். அவர் யார் தெரியுமா?
கடந்த 2022 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனை வைத்து “டான்” என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்திதான் அவர். சிபி சக்ரவர்த்தி “டான்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினியிடம் கதை கூறிவுள்ளதாகவும் விரைவில் ரஜினியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.
அதனை தொடர்ந்து சிபி சக்ரவர்த்தி தெலுங்கு நடிகர் ஒருவருக்கு கதை கூறினாராம். அதுவும் வேலைக்கு ஆகவில்லையாம். இதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் நொந்துபோய் இருந்தாராம். அந்த சமயத்தில் தனது நண்பரான சிவகார்த்திகேயனை சந்தித்து, சொந்தமாக படம் தயாரிக்கப்போவதாக கூறினாராம். அதற்கு சிவகார்த்திகேயன், “அதெல்லாம் வேண்டாம். இப்போது நான் மிகவும் பிசியாக இருக்கிறேன். ஒன்றரை வருடங்கள் காத்திருங்கள். நிச்சயமாக கால்ஷீட் தருகிறேன். அதுவரையில் கதையில் கவனம் செலுத்துங்கள்” என்று கூறி அவருக்கு நம்பிக்கை கொடுத்துள்ளாராம். இந்த தகவலை வலைப்பேச்சு அந்தணன் தனது வலைப்பேச்சு வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இதையும் படிங்க: சிவக்குமாரும், ஜெய்சங்கரும் பண்ணாத லூட்டி கிடையாது… அப்படி என்ன செஞ்சாங்க?..