எப்பா எங்க வந்திருக்கோம்?.. என்ன கேட்க?.. நிரூபர் கேட்ட கேள்வியால் பதறிப் போன சிவகார்த்திகேயன்!..
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராக மிகவும் விரும்பப்படும் நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அனைவரையும் மதிக்கத்தக்க நடிகராகவும் வலம் வருகிறார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொண்டாடப்படும் நடிகராக சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்ததன் மூலம் இன்று தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக மிகவும் குறுகிய காலத்தில் உயர்ந்து இருக்கிறார். சாதாரண ஒரு ஆங்கராக இருந்து இன்று மிகப்பெரிய உச்ச நடிகராக இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய […]
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராக மிகவும் விரும்பப்படும் நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அனைவரையும் மதிக்கத்தக்க நடிகராகவும் வலம் வருகிறார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொண்டாடப்படும் நடிகராக சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார்.
தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்ததன் மூலம் இன்று தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக மிகவும் குறுகிய காலத்தில் உயர்ந்து இருக்கிறார். சாதாரண ஒரு ஆங்கராக இருந்து இன்று மிகப்பெரிய உச்ச நடிகராக இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணமே சிவகார்த்திகேயனின் கடின உழைப்புதான் காரணம்.
யாருக்கும் தேவையான உதவிகளை தேடிப் போய் செய்வதில் சிவகார்த்திகேயன் மாதிரி ஒரு நல்ல நடிகரை தமிழ் சினிமாவில் பார்த்திருக்க முடியாது. இவரால் பயனடைந்தவர்கள் ஏராளம். இவரின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் தயாராகி வரும் படம் ‘அயலான்’. ஃபேண்டஸி திரைப்படமான அயலான் திரைப்படம் குழந்தைகள் விருப்பப்படும் படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மேலும் அவரின் நடிப்பில் மற்றுமொரு திரைப்படமான ‘மாவீரன்’ திரைப்படமும் திரைக்கு வர காத்திருக்கின்றது. இந்த நிலையில் அவரின் சொந்த ஊரான திருச்சியில் முதல்வர் குறித்த கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கண்காட்சியை திறந்து வைக்க சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.
விழாவிற்கு வந்து கண்காட்சியையும் திறந்து வைத்து முதல்வரை குறித்து மிகவும் பேசினார் சிவகார்த்திகேயன். கூடவே அமைச்சர் கே.என். நேருவும் அருகில் அமைந்திருந்தார். நிரூபர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்து வந்த சிவகார்த்திகேயனிடம் நிரூபர் ஒருவர் ‘மாவீரன் படமும் ஜெய்லர் படமும் ஒன்றாக வருகிறது என்று சொல்கிறார்களே? அதெப்படி சாத்தியமாகுமா?’ என்று கேட்டார்.
அந்தக் கேள்வியை கேட்டதும் அமைச்சர் நேரு கோபமாக வெளியேறினார். உடனே சிவகார்த்திகேயனும் பதற்றமடைந்து அது வரும் போது வரும் என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.
இதையும் படிங்க : ரஜினியா? கமலா?.. யாருக்கு திமிர் அதிகம்னு நேர்ல பார்த்திருக்கேன் – மீசை ராஜேந்திரன்…