எஸ்.ஜே.சூர்யாவுக்கு இந்த நோய் இருக்கு!.. பேட்டியில் ஓபனாக உடைத்த இயக்குனர்… இதுவுமா!

Mark Antony: ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா இணைந்து சக்கை போடு போட்ட திரைப்படம் மார்க் ஆண்டனி. இப்படத்தில் நடந்த சுவாரஸ்யமான தகவலை ஒரு பேட்டியில் ஆதிக் பகிர்ந்து இருந்தார். அதில், எஸ்.ஜே.சூர்யாவுக்கு மனநோய் இருப்பதையும் கூறி இருந்தார். டைம் ட்ராவல் படமாக உருவாக்கப்பட்ட மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. படத்தின் வசூல் 100 கோடியை தாண்டி இருக்கிறது. மார்க் ஆண்டனி படத்தின் சக்ஸஸ் மீட் சமீபத்தில் நடந்தது. படம் குறித்து […]

By :  Akhilan
Update: 2023-09-23 02:57 GMT

Mark Antony: ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா இணைந்து சக்கை போடு போட்ட திரைப்படம் மார்க் ஆண்டனி. இப்படத்தில் நடந்த சுவாரஸ்யமான தகவலை ஒரு பேட்டியில் ஆதிக் பகிர்ந்து இருந்தார். அதில், எஸ்.ஜே.சூர்யாவுக்கு மனநோய் இருப்பதையும் கூறி இருந்தார்.

டைம் ட்ராவல் படமாக உருவாக்கப்பட்ட மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. படத்தின் வசூல் 100 கோடியை தாண்டி இருக்கிறது. மார்க் ஆண்டனி படத்தின் சக்ஸஸ் மீட் சமீபத்தில் நடந்தது. படம் குறித்து தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளியாகி வருகிறது.

இதையும் படிங்க: ஜவானில் அட்லி செஞ்ச வேலை.. மூடி மறச்சி வெத்து பந்தா காட்டும் ஷாருக்கான்…

இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஓசிடி என்னும் மனநோய் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஒருமுறை படப்பிடிப்பில் உதவியாளர் தண்ணீர் குடிக்க க்ளாஸை எடுத்து வர கூறி இருக்கிறார். அவர் எடுத்து வந்த க்ளாஸை கழுவுனியா எனக் கேட்டு இருக்கிறார். அவரோ புதுகிளாஸ் சார் என பதில் சொல்லி இருக்கிறார்.

அப்போ நீ கழுவல எனக் கடுப்பானாராம். அடுத்து, கழுவிடுறேன் சார் என அவர் கூற அப்போ நீ கழுவல அப்படி தானே என்று சத்தம் போட்டாராம். அந்த உதவியாளரை கூப்பிட்ட ஆதிக், நீ அவர் கேட்ட போதே கழுவுனேன் இல்லை என பதில் சொன்னால் இது அப்போவே முடிந்து இருக்கும் தானே என்றாராம்.

இதே தகவலை விஷாலும் ஒரு பேட்டியில் போட்டு உடைத்து இருக்கிறார். ஓசிடி என்னும் மனநோயால் எல்லாமே சுத்தமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் கடுமையாக கோவம் வருமாம். அதேப்போல எஸ்.ஜே.சூர்யாவும் படப்பிடிப்பில் அவருக்கு சுத்தமாக எதுவும் இல்லை என்றால் கடுமையாக சத்தம் போடுவாராம்.

இதையும் படிங்க: சேட்டன்களுக்கு விஜய் எப்போதுமே செல்லம்!… பத்திக்கிட்டு இருக்கும் பிரச்னையில் வைரலாக பரவும் ஜில்லா மேட்டர்!

தமிழ் சினிமாவின் தற்போதைய ஹிட் நாயகனாக இருக்கும் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் எல்லா படங்களுமே வெற்றி படமாக அமைவதால் அவரை லக்கி மேனாகவே கோலிவுட் பார்க்கிறது. இதனால் அவரை தங்கள் படங்களில் புக் செய்யவும் பலர் விரும்புவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

Tags:    

Similar News