கமலின் வாட்ச் தொலைந்ததால் உருவான நாயகன் படம்!.. இப்படி ஒரு பிளாஷ்பேக் இருக்கா!..

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜனகராஜ், நாசர், சரண்யா உள்ளிட்ட பலரும் நடித்து 1987ம் வருடம் வெளியான திரைப்படம்தான் நாயகன். தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய கிளாசிக் படமாக நாயகன் இருக்கிறது. இந்த படத்தில் மூன்று வித கெட்டப்புகளில் கமல் நடித்திருந்தார். இப்படத்திற்கு இளையராஜா கொடுத்த இசை ரசிகர்களால் எப்போதும் மறக்க முடியாதது. குறிப்பாக அவர் போட்ட தென்பாண்டி சீமையிலே பாடல் எப்போதும் இசை ரசிகர்களால் சிலாகிப்பட்டு வருகிறது. கமல்ஹாசனும் தனது சிறப்பான நடிப்பை இப்படத்திற்காக கொடுத்திருந்தார். இதையும் […]

Update: 2024-04-03 10:30 GMT

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜனகராஜ், நாசர், சரண்யா உள்ளிட்ட பலரும் நடித்து 1987ம் வருடம் வெளியான திரைப்படம்தான் நாயகன். தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய கிளாசிக் படமாக நாயகன் இருக்கிறது. இந்த படத்தில் மூன்று வித கெட்டப்புகளில் கமல் நடித்திருந்தார்.

இப்படத்திற்கு இளையராஜா கொடுத்த இசை ரசிகர்களால் எப்போதும் மறக்க முடியாதது. குறிப்பாக அவர் போட்ட தென்பாண்டி சீமையிலே பாடல் எப்போதும் இசை ரசிகர்களால் சிலாகிப்பட்டு வருகிறது. கமல்ஹாசனும் தனது சிறப்பான நடிப்பை இப்படத்திற்காக கொடுத்திருந்தார்.

இதையும் படிங்க: கமல்ஹாசனையே பயப்பட வைத்த கவுண்டமணி!.. வேற ரூட்டில் காயை நகர்த்திய உலக நாயகன்..

கமலின் மனைவியாக வந்த சரண்யாவும், கமலின் நண்பனாக வந்த ஜனகராஜும் கூட தங்களின் முத்திரையை பதித்திருந்தனர். அதற்கு முன்பும் சரி. பின்பும் சரி.. நாயகன் போல ஒரு படம் உருவாகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கவுதம் மேனன் உட்பட நாயகன் படம் பார்த்துவிட்டு சினிமாவுக்கு வந்த பிரபலங்கள் பலர் இருக்கிறார்கள்.

Nayakan

வாலிபன் முதல் முதியவர் வரை கமல்ஹாசன் தனது அசத்தலான நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டார். இந்த படம் ஆங்கிலத்தில் வெளிவந்த காட் ஃபாதர் படத்தின் தழுவல் என பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அதில் உண்மை இல்லை. சில காட்சிகள் வேண்டுமானால் அப்படத்தின் சாயலில் இருக்கலாம். ஆனால், உண்மையில் இது மும்பையில் தமிழக மக்களின் காட் பாதராக பார்க்கப்பட்ட வரதராஜ முதலியார் என்பவரின் வாழ்க்கை கதை.

இதையும் படிங்க: கவுண்டமணியை ஒதுக்கிய ரஜினி, கமல்!.. கொஞ்சம் அசந்தா இமேஜை காலி பண்ணிடுவாரு!..

அவரின் அனுமதியோடுதான் நாயகன் படத்தை இயக்கினார் மணிரத்னம். முதலில் இப்படத்திற்கான கதை அமையவில்லை. ஆனால், மும்பைதான் கதைக்களம் என்பதில் உறுதியாக இருந்தனர். எனவே, இருவரும் மும்பை சென்றனர். அப்போது தமிழர்கள் வசிக்கும் பகுதியில் கமலின் வாட்ச் காணாமல் போய்விட்டது. அங்கே இருந்தவர்கள் வரதராஜ முதலியாரிடம் செல்லுங்கள். அவர் மீட்டு கொடுப்பார் என கூறினார்கள். மக்கள் அவரை வரதபாய் என அழைத்தனர்.

அவரை பார்க்க போன பின்புதான் நாயகன் படத்திற்கான கரு மணிரத்னம் மனதில் உருவானது. அவரிடமே அவர் கடந்து வந்த பாதைகளை கேட்டு திரைக்கதை எழுதினார். கமலும் அதற்கு ஒப்புகொண்டார். இப்படி உருவான அந்த படம்தான் இப்போதும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News