கோபத்தில் பிரிந்த கண்ணதாசன் - சிவாஜி.. பிரிந்த இரு துருவங்களையும் சேர்த்த அந்த அழகான பாடல்...
நடிகர் சிவாஜி தமிழ் சினிமாவின் நடிகர் திலகம் என அழைக்கப்பட்டவர். இவர் நடிப்பை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இப்படியெல்லாமா ஒரு மனிதர் நடிப்பார் என வியக்கும் அளவிற்கு தன்னுடைய நடிப்பு திறமையை வெளிக்காட்டியவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பழ மொழிகளில் கிட்டதட்ட 250க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலே இவரின் நடிப்பு ஏற்கனவே அனுபவம் உள்ளது போல் இருந்தது. […]
நடிகர் சிவாஜி தமிழ் சினிமாவின் நடிகர் திலகம் என அழைக்கப்பட்டவர். இவர் நடிப்பை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இப்படியெல்லாமா ஒரு மனிதர் நடிப்பார் என வியக்கும் அளவிற்கு தன்னுடைய நடிப்பு திறமையை வெளிக்காட்டியவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பழ மொழிகளில் கிட்டதட்ட 250க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலே இவரின் நடிப்பு ஏற்கனவே அனுபவம் உள்ளது போல் இருந்தது. ஆனால் சினிமாவிற்கு முன் இவர் பல மேடைகளில் நாடகங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வீரபாண்டிய கட்டபொம்மன், பாசமலர், கர்ணன் போன்ற திரைப்படங்களில் தனது அபரிமிதமான நடிப்பினால் ரசிகர்களை கட்டி போட்டு கொண்டவர்.
இதையும் படிங்க: அம்மாவை ஏமாத்த அந்தப் பட கெட்டப்பில் போன சிவாஜி! தாய்க்கு தெரியாதா தன் மகனை? எப்படி கண்டுபிடிச்சார் தெரியுமா
இவர் நடிப்பின் உச்சம் என்றால் இவரைபோலவே பாடல்களை எழுதுவதில் கவியரசர் கண்ணதாசன் உச்சம். கவியரசருக்கு என பல ரசிகர்களும் உண்டு. வாழ்க்கை தத்துவங்களை தனது பாடல்களின் மூலம் மிக அழகாக வெளிப்படுத்த தெரிந்தவர். அந்த காலத்தில் மிகவும் பிஸியாக இருந்த பாடலாசிரியர்களில் இவரும் ஒருவர். இவரும் நடிகர் சிவாஜியும் நெருங்கிய நண்பர்கள்.
இவர்களின் நட்பினை சொல்ல வார்த்தைகள் இல்லை. அந்த அளவிற்கு நெருக்கமானவர்கள். இவர்கள் இருவரும் தங்களது கலை பயணத்தினை வெவ்வேறு வழிகளில் ஒரே நேரத்தில் தொடங்கியவர்கள். சினிமாவிற்கு வருவதற்கு முன்னதாகவே இருவரும் நண்பர்கள். சிவாஜி கணேசன் நடித்த இல்லற ஜோதி படத்திற்கு கதையாசிரியராக இருந்தவர் நமது கண்ணதாசன். இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர். கட்சி ரீதியாக இருவருக்கும் இடையில் மனகசப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பல நாள் பழக்கம்! பாடகி சொன்ன ஒரே வார்த்தை – உடனே கைவிட்ட சிவாஜி
இதன்பின் சில காலம் இருவரும் பேசாமலே இருந்துள்ளனர். சில காலம் கண்ணதாசன் சிவாஜியின் எந்த படத்திற்கும் பாடல்களை எழுதாமல் இருந்துள்ளார். சிவாஜி கணேசன் சில காலமாக பாவ மன்னிப்பு, பார்த்தால் பசி தீரும், பாலும் பலமும் என பா வரிசை படங்களில் நடித்து வந்தார். இப்படங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தன. ஒரு முறை சிவாஜியின் நடிப்பில் வெளிவந்த பாகப்பிரிவினை படத்தில் அவசரமாக பாடல் எழுத வேண்டியிருந்தது. அதுவும் தாலாட்டு பாடல். ஆனால் அந்த படத்திற்கு பாடல் எழுதிய கவிஞர் உடனே கிடைக்காது என்று கூறிவிட்டாராம்.
அபோது படக்குழுவினர் சிவாஜியிடம் கண்ணதாசனை எழுத வைப்போமா என கேட்டுள்ளார். அதற்கு சிவாஜி தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை அவர் எழுத சரி சொன்னால் செய்வோம் என கூறியுள்ளார். பின் கண்ணாதாசனும் பாடல் எழுதியுள்ளார். அப்பாடல்தான் “ஏன் பிறந்தாய் மகனே” பாடல். ஆனால் இப்பாடலின் மூலம் இவர்கள் ஒன்று சேரவில்லை. இப்படத்திற்கு பின் சிவாஜி பாசமலர் படத்தில் நடித்துள்ளார். அப்போது அப்படத்தில் வரும் “மலர்ந்தும் மலராத பாதி மலர் போல” பாடலை கேட்டுள்ளார். இப்பாடலை கேட்டதும் அவருக்கு அழுகையே வந்துவிட்டதாம்.
இதையும் படிங்க: சிவாஜியுடன் இத்தனை படங்களா? பத்மினியை விட அதிக ஸ்கோர் செய்த நடிகை யார் தெரியுமா?
பின் கண்ணதாசனை வரவைத்தாராம். கண்ணதாசன் அறைக்குள் வந்த உடனேயே அவரை அழுதுகொண்டே பாச உணர்வோடு கட்டிபிடித்துள்ளார் சிவாஜி. அடிக்க சென்ற அதே கை இன்று அணைத்து கொண்டது. இவர்கள் இருவருக்கும் இடையே நடந்த பாசப்போராட்டம் அங்கிருந்தவர்களின் நெஞ்சத்தினை ஈர்த்துள்ளது.