என்னை அடித்த வடிவேலுவை இப்படிதான் பழி வாங்கினேன்!. காதல் சுகுமார் செம கெத்துதான்!..
நடிகர் வடிவேலுவை எல்லோருக்கும் காமெடி நடிகராகத்தான் தெரியும். ரசிகர்கள் எல்லோருக்கும் அவரை பிடிக்கும். அவர் மிகச்சிறந்த நடிகர். அதில் சந்தேகமே இல்லை. ஆனால், நிஜ வாழ்வில் அவர் எப்படிப்பட்டவர்?.. தன்னுடன் நடிக்கும் சக கலைஞர்களை எப்படி நடத்துவார்?.. இயக்குனர்களை எப்படி கதற வைப்பார்?.. வாய்ப்புக்காக வரும் சக நடிகர்களிடம் எப்படி சைக்கோத்தனமாக நடந்து கொள்வார் என்பதெல்லாம் அவரிடம் பழகியவர்களுக்கும், அவரை பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கும் மட்டுமே தெரியும்.
திரையில் சிரிக்க வைக்கும் வடிவேலு நிஜவாழ்வில் மிகவும் சீரியஸானவர். யாரையும் மதிக்க மாட்டார். இவரை பற்றி தவறாக பேசிவிட்டால் அவ்வளவுதான்.. அவர்களுக்கு தன்னுடன் நடிக்கும் வாய்ப்பையே தரமாட்டார். தினமும் இவரின் அலுவலகத்தின் கீழே போண்டா மணி, அல்வா வாசு, பாவா கிருஷ்ணன் போன்ற சிலர் வாய்ப்புக்காக நிற்பார்கள். வடிவேலு யாரை அடுத்த நாள் வர சொல்கிறாரோ அவர்கள் வடிவேலுவுடன் நடிப்பார்கள்.
இதையும் படிங்க: சொந்த தம்பிக்கு கூட உதவாத வடிவேலு!.. இவ்வளவு சுயநலமா?.. கிழித்து தொங்கவிட்ட பயில்வான்..
எத்தனை மணி நேரமானாலும் அவர்கள் நின்று கொண்டே இருக்க வேண்டும். கால் வலிக்கிறதே என உட்கார்ந்து விட்டால் அவருக்கு வாய்ப்பு கிடையாது. அதேபோல், இவருக்கு பிடிக்காத நடிகர்களுடன் நடிக்கும் காமெடி நடிகர்களுக்கும் இவர் நடிக்கும் படத்தில் வாய்ப்பு கொடுக்கமாட்டார்.
விஜயகாந்தின் படங்களில் நடித்த சில நடிகர்களை தனது படத்திலிருந்து தூக்கியவர்தான் வடிவேலு. இப்படி பல சம்பவங்கள் இருக்கிறது. இந்த தகவல்களையெல்லாம் அவருடன் நடித்த நடிகர்கள் பல ஊடகங்களிலும் சொன்னவைத்தான்.
இதையும் படிங்க: மரண அடி வாங்கியும் மாறாத மாமன்னன்!.. மீண்டும் குடைச்சல் கொடுக்கும் வடிவேலு…
நடிகர் காதல் சுகுமார் அந்த படத்தில் நடிப்பதற்கு முன் டிவி நிகழ்ச்சிகளில் வடிவேலுவை இமிட்டேட் செய்து அவரைப்போலவே நடித்து வந்தார். இது வடிவேலுவுக்கு பிடிக்கவில்லை. ஒருமுறை அவரை அழைத்து தன்னுடைய ஆட்கள் மூலம் கடுமையாக தாக்கிவிட்டு ‘இனிமேல் என்னை மாதிரி நடிக்காதே’ என எச்சரித்து அனுப்பினார். இதை சுகுமார் பல பேட்டிகளிலும் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சுகுமார் ‘என்னை வடிவேலு அடித்து அவமானப்படுத்தி அனுப்பிய பின்னர்தான் காதல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து பிரபலமானேன். தொடர்ந்து படங்களில் நடித்தேன். ஒருமுறை படப்பிடிப்புக்காக ஏவிஎம் ஸ்டுடியோவில் இருந்தேன். அன்று நான் நடிக்கும் 4 படங்களின் பூஜை நடந்தது.
எல்லா போஸ்டர்களிலும் என் முகம் இருந்தது. அப்போது வடிவேலு அந்த பக்கம் வந்தார். எல்லோரும் எழுந்து நின்றார்கள். எனக்கு கிடைத்த சரியான சந்தர்ப்பம் என நினைத்த நான் கால் மேல் கால் போட்டு கையில் கண்ணாடியை வைத்து என் முகத்தை பார்த்து கொண்டிருந்தேன். இதை கவனித்த வடிவேலு என்னை தாண்டி செல்லாமல் என் முதுகுக்கு பின்னால் சென்றுவிட்டார்’ என சுகுமார் பேசியிருந்தார்.
இதையும் படிங்க: வடிவேலு சரியான ஆளுங்க… குத்தமா சொல்லல… சும்மா சொல்லணும்னு தோணிச்சு… பகீர் கிளப்பிய பயில்வான்