எல்லாரும் அடங்குங்க!.. இதான் ஜெயிலர் ரியல் கலெக்ஷன்!.. சன் பிக்சர்ஸ் கொடுத்த அப்டேட்!...
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த 10ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஜெயிலர். ரஜினி முக்கிய வேடத்தில் நடித்த இப்படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். ரஜினியின் தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் பெரிய வெற்றியை பெறாத நிலையில் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
ஜெயிலர் பட பாடல் வீடியோக்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவே இப்படத்திற்கு நல்ல ஹைப் உருவானது. எனவே, இப்படத்தில் நல்ல முன்பதிவு இருந்தது. குறிப்பாக வெளிநாடுகளில் பல நாட்களுக்கு முன்பதிவுக்கான டிக்கெட்டுகள் விற்பனை ஆனது. படம் வெளியாகி ரசிகர்களை கவரவே தியேட்டர்களில் கூட்டம் களை கட்டியது.
இதையும் படிங்க: ஜெயிலர் ஃபார்முலாவை பின்பற்றும் ரஜினி.. தலைவர் 170 படத்தின் கதை இதுதான்..
இப்படத்தில் மோகன்லால், சிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷெராப் என பலரும் நடித்திருந்ததால் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்களிலும் ஜெயிலர் படத்திற்கு நல்ல வசூல் கிடைத்தது. படம் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில் இப்படம் ரூ.450 கோடியை வசூல் செய்ததாக சமூகவலைத்தளங்களில் மூவி டிராக்கர்ஸ்கள் பதிவிட்டனர்.
ஆனால், ஒரு வார கலெக்ஷன் ரூ.375 கோடி மட்டுமே என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்பின் அடுத்த 2 நாளில் இப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்து விக்ரம் பட வசூலை தாண்டியதாகவும், படம் வெளியாகி 12ம் நாளில் ரூ.500 கோடி வசூல் செய்து பொன்னியின் செல்வன் பட வசூலான ரூ.500 கோடியை தாண்டியதாக பலரும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: போதும்… போதும்.. ரொம்ப லெங்க்தா போது! ஜெய்லர் வெற்றியால் ஜெட் ஸ்பீடில் ரஜினிகாந்த்!
படம் முடிந்து இப்போது 2 வாரம் ஆகிவிட்ட நிலையில், இப்படம் ரூ.550 கோடியை தாண்டிவிட்டதாக சில மூவி ட்ராக்கர்ஸ்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். ஆனால், அதில் உண்மையில்லை என்பது இப்போது தெரியவந்துள்ளது. இப்படம் உலக அளவில் ரூ.525 கோடியை வசூலித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த செய்தி ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. எனவே, இந்த தகவலை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வாரமும் முக்கிய படங்கள் எதுவும் வெளிவராத நிலையில் ஜெயிலர் படத்திற்கு வசூல் அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: எல்லா ஏரியாலையும் ஐயா கில்லி… பழைய பார்முக்கு திரும்பிய ரஜினி… பாட்ஷா இரண்டாம் பாகமா?