இந்த நெருக்கடிதான் காரணமா? ‘விடாமுயற்சி’-க்கு வைக்கப்பட்ட செக்.. சுதாரித்துக் கொண்ட லைக்கா

Vidamuyarchi Movie: எப்படியோ ஒரு வழியாக விடா ்முயற்சி படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க இருக்கிறார்கள். ஜூன் 26 ஆம் தேதி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் மீண்டும் ஆரம்பமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அக்டோபர் 31ம் தேதி அதாவது தீபாவளி ரிலீஸாக இந்த படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. ஜூலை மாதத்திற்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை ஆரம்பிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் ஜூலை இரண்டாம் தேதி அர்ஜுன் விடாமுயற்சி படத்தில் இணைய […]

By :  Rohini
Update: 2024-06-24 06:15 GMT

ajith vida

Vidamuyarchi Movie: எப்படியோ ஒரு வழியாக விடா ்முயற்சி படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க இருக்கிறார்கள். ஜூன் 26 ஆம் தேதி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் மீண்டும் ஆரம்பமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அக்டோபர் 31ம் தேதி அதாவது தீபாவளி ரிலீஸாக இந்த படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

ஜூலை மாதத்திற்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை ஆரம்பிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் ஜூலை இரண்டாம் தேதி அர்ஜுன் விடாமுயற்சி படத்தில் இணைய இருக்கிறாராம் .தன்னுடைய மகள் திருமணத்தில் பிசியாக இருப்பதால் ஜூலை இரண்டாம் தேதியிலிருந்து விடாமுயற்சி படத்தில் இணைய இருக்கிறாராம் அர்ஜுன்.

இதையும் படிங்க: விஜயை பத்தி கேள்விப்பட்டது பொய்! பத்துக்கு பத்து ரூம்ல? உயிர் நண்பனா இப்படி சொல்றது?

இந்த நிலையில் லைக்கா நிறுவனத்திற்கு வந்த ஒரு நெருக்கடிதான் மீண்டும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை தொடங்கி இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த படம் ஆரம்பிக்கப்பட்ட முதலில் அதாவது விக்னேஷ் சிவன் இந்த படத்தை தொடங்கிய நாள் முதல் netflix நிறுவனம் தான் இந்த படத்தை 75 கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்தது.

இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பில் தொய்வு ஏற்பட்டதால் netflix நிறுவனம் லைக்கா நிறுவனத்திடம் இன்னும் சிறிது நாட்களில் படப்பிடிப்பை தொடங்கவில்லை என்றால் இந்த ஒப்பந்தத்தை நாங்கள் ரத்து செய்து விடுகிறோம். என கூறியதாம். இது லைக்காவுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் 75 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய இந்த படத்தின் ஒப்பந்தத்தை கேன்சல் செய்தால் அது லைக்காவுக்கு வந்த பேரிடியாக தான் கருதப்படும்.

இதையும் படிங்க: நான் இருக்கும்போது நயன்தாராவா?!.. அசின் செய்த வேலையில் அப்செட் ஆன ஏ.ஆர்.முருகதாஸ்!…

அதன் காரணமாகவே தான் மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்திருக்கிறார்கள் என்று கோடம்பாக்கத்தில் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கின்றது. நிலைமையைக் அறிந்து அஜித்தும் அதற்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக தெரிகிறது.

ஒரு பக்கம் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணைந்து குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் விடாமுயற்சி படத்திற்கு பிறகு தான் குட் பேட் அக்லி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் அஜித் இணைவார் என்று சொல்லப்படுகிறது.

Tags:    

Similar News