சூர்யாவுடன் நடிக்க தயக்கம் காட்டும் நடிகர்! என்ன மக்கா பழச எல்லாம் மறந்துட்டீங்களா?
Actor Surya: தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. குடும்பத்தோடு மும்பையில் வசித்து வரும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற வரலாற்று பின்னனியில் உருவாகும் கதையில் மிகத் தீவிரமாக நடித்து வருகிறார். படம் அடுத்த வருடம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இதனை அடுத்து சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் இணைய இருக்கிறார். ஏற்கனவே இந்த கூட்டணி ஒரு வலுவான கூட்டணி என்பதை சூரறைப்போற்று என்ற திரைப்படத்தின் மூலம் நிரூபித்து விட்டது.
இதையும் படிங்க: மீண்டும் பழைய ஃபார்ம்க்கு வரும் செல்வராகவன்… விட்ட இடத்தை பிடிப்பாரா?..
தேசிய விருதையும் தட்டி சென்று ஒரு திறமையான கூட்டணி என்பதையும் சொல்லாமல் சொல்லிக் காட்டி விட்டது. மீண்டும் இதே கூட்டணியில் அமைவது ரசிகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில் சுதா கொங்கரா மற்றும் சூர்யா இணையும் படத்தில் மாதவனுக்கு ஒரு ரோல் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு அந்தளவுக்கு முக்கியத்துவம் இல்லாததால் மாதவன் நடிக்க தயக்கம் காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: ரெட் கார்டு ஒரு பக்கம் இருக்கட்டும்!.. எனக்கு ஸ்ரீதேவி பொண்ணு தான் வேணும் என அடம்பிடிக்கும் அதர்வா?
இருந்தாலும் மாதவனுக்கும் சூர்யாவுக்கும் இடையே ஒரு நல்ல நட்பு இருப்பதாகவும் ஏற்கனவே மும்பையில் வசிக்கும் மாதவன்தான் சூர்யாவுக்கு ஒரு நல்ல கம்பெனியாக இருக்கிறார் என்பதால் கண்டிப்பாக மறுக்க மாட்டார் என்றும் சொல்கிறார்கள்.
அதையும் தாண்டி மாதவனுக்கு ஒரு நீண்ட கம்பேக் பிறகு தரமான படத்தை கொடுத்ததே சுதா கொங்கராதான். இறுதிச்சுற்று என்ற வெற்றிப் படத்தை கொடுத்து மாதவனுக்கு உயிர் கொடுத்ததே சுதா கொங்கரா. அதனால் கண்டிப்பாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் தான் ஒன்றிய அரசு மாதவனுக்கு ஒரு கௌரவமான பதவியை கொடுத்து அமரவைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாத்தவுடனே தலையே சுத்துது!.. அழகை ஒப்பனா காட்டி உசுர வாங்கும் பிரக்யா!.