செல்லக்குட்டி தமன்னாவ நம்ப வைத்து ஏமாத்திடீங்களே.?! ஜெயிலர் படத்தில் நடந்த அந்த சம்பவம் இதோ...
ஒரு காலத்தில், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் என முன்னணி நட்சத்திரங்களோடு ஜோடி போட்டு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தமன்னா.
அதன் பிறகு தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை நடித்து வந்த தமன்னா நடிப்பில் கடைசியாக நவம்பர் ஸ்டோரி எனும் வெப் தொடரில் நடித்து பெயர் பெற்றார். அதன் பிறகு பெரிய வாய்ப்பு எதுவும் வராத நிலையில்,
இதையும் படியுங்களேன் - ஹீரோ முதல் இயக்குனர்கள் வரை.. எந்த ஏரியாவாக இருந்தாலும் இவங்க டாப் தான்... எம்.ஜி.ஆர், கமல் முதல் சிம்பு, தனுஷ் வரையில்...
அண்மையில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் தமன்னா நடிக்கிறார் என கூறப்பட்டது. சரி, இந்த படத்தில் ரஜினி உடன் ஹீரோயினாக நடித்தால் மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்த்து தமன்னா ரசிகர்கள் காத்திருந்தனர்.
இதையும் படியுங்களேன் - தனது தங்கச்சி இறந்தபோது விஜய் இதைத்தான் செய்தார்... கண்ணீர் விட்ட S.A.சந்திரசேகர்...
ஆனால், அவர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக ஒரு செய்தி வெளியாகியுள்ள்ளது, அதாவது, நடிகை தமன்னாவுக்கு இதில் கௌரவ தோற்றம் போல ஒரு சிறு வேடம் தானாம். அதனால் தங்களது ஆஸ்தான நாயகியை வெகு நாட்கள் கழித்து திரையில் பார்க்க போகிறோம் என எதிர்பார்த்த தமன்னா ரசிகர்களுக்கு இந்த செய்தி ஏமாற்றம் அழித்துவிட்டது.