சிங்கப்பெண்ணே ஆனந்திக்குப் பிடிச்ச நடிகர் யாருன்னு தெரியுமா? அட அவரா?
யாரு அந்த சிங்கப்பெண் என்று தான் பார்க்க ஆவல்... வாங்க அவங்களோட பயோடேட்டாவையே பார்க்கலாம்.
சிங்கப்பெண்ணே ஆனந்தி யாருன்னு தெரியுமா என அவரது யதார்த்தமான வெள்ளந்தியான வெகுளியான அப்பாவித்தனமான நடிப்பைப் பார்த்ததும் பலரும் வலைதளத்தில் தேடத்துவங்கி விட்டனர். இவர் யார் எப்படி இந்த சீரியலுக்குள் வந்தாங்கன்னு பார்ப்போம்.
இவரோட உண்மையான பேரு மானிஷா. 2001ம் ஆண்டு மார்ச் 29ல் கேரளாவில் பிறந்தவர். அங்குள்ள பத்தினம்திட்டா அருகில் உள்ள அருவிக்குளம் என்ற கிராமத்தில் பிறந்துள்ளார். அவரது தந்தையின் பெயர் மகேஷ். அங்குள்ள குன்னம் என்ற ஊரில் உள்ள அரசுப்பள்ளியில் படித்துள்ளார்.
மதுரையில் உள்ள அன்னை பாத்திமா காலேஜ்ல பிஎஸ்சி ஏர்லைன்ஸ் முடித்துள்ளார். மதுரையில் படிக்கும்போது நிறைய தமிழ்சினிமாக்களைப் பார்த்துள்ளார். சூர்யாவை ரொம்பவே பிடிக்கும்னு சில இடங்கள்ல பதிவிட்டு இருக்கிறார். காலேஜ் முடிச்சதும் மாடலிங்கில் ஆர்வமாக இருந்துள்ளார். சில விளம்பரப்படங்களிலும் நடித்துள்ளார்.
டிக்டாக், ரீல்ஸ்னு ரொம்பவே பிரபலமாக இருந்தார். இவருக்கு மலையாளத்தில் படாக பைங்கிளி என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுல அவங்க நடிப்பு ரொம்பவே சூப்பராக இருந்ததாம். 2020ல் கண் என்ற கதாபாத்திரம் மூலம் அறிமுகமாகுறாங்க. அது பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்புகிறது. அதே போல மலையாளத்தில் காமெடி ஸ்டார்ஸ் என்ற டிவி ஷோவிலும் பங்கேற்றுள்ளார்.
இவரது முதல் தமிழ் சீரியல் சிங்கப்பெண்ணே தான். தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் 2வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தத் தொடரில் ஹீரோயின் ஆனந்தி நடிப்பு ரொம்பவே பிரமாதமாக உள்ளது. அதனாலேயே டிஆர்பி எகிறியுள்ளது.
சிங்கப்பெண்ணே நாடகத்தில் அன்புக்கும், ஆனந்திக்கும் இடையே மலரும் மென்மையான காதலும், அதற்கு சதி செய்யும் மித்ராவின் வேலைகளும் பார்வையாளர்களை அதிகம் ஈர்த்துள்ளன. குறிப்பாக அந்த நாடகத்தில் கம்பெனி எம்டியாக வரும் மகேஷ்சும் ஆனந்தியைத் தீவிரமாகக் காதலித்து வருகிறார். அதே நேரம் ஆனந்தியோ அன்பை உயிருக்கு உயிராகக் காதலித்து வருகிறார்.
மகேஷின் அம்மாவுக்கு மகேஷ் ஆனந்தியைக் காதலிப்பது பிடிக்கவில்லை. அதே நேரம் கம்பெனியில் முக்கிய நிர்வாகியாக உள்ள மித்ராவுக்கு மகேஷின் மீது காதல் ஏற்படுகிறது. அவளுக்கு கிராமத்துப் பெண்ணான ஆனந்தி இடைஞ்சலாக இருக்கிறார். இப்படி முக்கோண காதல் கதை சினிமாவில் பார்த்திருப்போம். ஆனால் டிவியில் அந்த அரைமணி நேரத்துக்குள் பெரிய ஹைப்புடன் முடித்து விடுவதால் தினமும் பார்க்க வேண்டும் என்ற துடிப்பைப் பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தி விடுகிறது.
அதனால் தான் இந்த நாடகம் இப்போது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. தவிர ஒவ்வொருவருடைய நடிப்பும் இயல்பாக உள்ளது. ஆனந்தியின் தந்தை அழகப்பனாக பட்டிமன்ற பேச்சாளர் கு.ஞானசம்பந்தன் நடித்துள்ளார்.