Pandian stores2: தங்கமயிலின் அடுத்த ரகசியம் உடைய போகுதா? இந்த பிள்ளையையே வச்சு செய்றீங்களே!
Pandian stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
மீனா மற்றும் தங்கமயில் நகைகளை கோமதி கொடுத்துவிட்டு செல்கிறார். தங்கமயில் தன்னுடைய நகைகளை பிரித்து பார்க்க அது கருத்து போய் இருக்கிறது. அத்தை சொன்ன நகை கருத்துவிட்டதாக சொல்லி புலம்புகிறார்.
வேற நகையை போடுங்க. அத்தையிடம் சொல்லி சமாளிச்சிக்கலாம். இந்த நகையை பத்திரமாக எடுத்து சென்று வைத்துவிட்டு வாங்க என்கிறார். அந்த நேரத்தில் செந்தில் வர இருவரும் ஒரே மாதிரி கலரில் உடை போட்டு வர அவர்கள் அழகாக இருப்பதாக ராஜி பாராட்டி கொண்டு இருக்கிறார்.
இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது எல்லாரும் மேட்சிங்காக டிரெஸ் போட்டு ஒன்னா போட்டோ எடுக்கணும் என்கிறார் மீனா. கதிர் அந்த கலர் டிரெஸை போட மாட்டானாம். அவனுக்கு உடம்புல ரத்தம் போடலை. தலையில் இருந்து கால் வரை திமிர் தான் ஓடுது என்கிறார். அவன் என் பேச்சை கேட்கவே கூடாதுனு இருக்கான் என்கிறார். வெளியில் டெக்கரேஷன் செய்துக்கொண்டு இருக்கும் கதிர் இதை கேட்டு விடுகிறார்.
வெளியில் ராஜி வரும் போது அவரை பார்த்து அதிர்ச்சியாகி விடுகிறார். எதுக்கு நீ என்ன பத்தி அடுத்தவங்களிடம் பேசிட்டு இருக்க எனக்கு இது பிடிக்கவே இல்லை என்கிறார். நீ மட்டும் எனக்கு பிடிச்சதை செஞ்சிட்டு இருக்கீயா? நான் மட்டும் ஏன் உனக்கு பிடிக்காததை செய்யாம இருக்கணும் என்கிறார்.
பின்னர் அரசியை எல்லாரும் ரெடி செய்துக்கொண்டு இருக்கின்றனர். நலங்கு வைக்க மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்து கொண்டு இருப்பதாக சொல்கிறார். எல்லாரும் காத்திருக்க உமையாள் மற்றும் சதீஷ் இருவரும் ஆட்களுடன் வருகின்றனர்.
அரசியை அமர வைத்து சதீஷுடன் நலங்கு வைக்க அப்போது குழலி வந்து கலாய்த்து கொண்டு இருக்கிறார். பின்னர் எல்லா ஜோடியும் ஒன்றாக புகைப்படம் எடுத்து கொண்டு இருக்க குழலி ஏன் சரவணன் மட்டும் தங்கமயிலுடன் ஒரே கலர் டிரெஸ் போடவில்லை எனக் கேட்கிறார்.
சரவணன் எடுத்து வந்த டிரெஸ் தனக்கு செட்டாகவில்லை என்கிறார். அந்த நேரத்தில் அரசிக்கு கால் செய்கிறார் குமரவேல். சுகன்யாவின் போன் தொடர்ந்து அடித்து கொண்டே இருக்க ஒருவர் வந்து போனை கொடுக்க அவர் பதறி போய் போனை மறைத்து கொள்கிறார்.