Siragadikka Aasai: விஜயாவிற்கு திருட்டு நகையை கொடுத்த ரோகிணி… அடுத்த பிரச்னை ஆரம்பமா?

By :  AKHILAN
Update: 2025-05-21 04:18 GMT

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

ரவி மற்றும் ஸ்ருதி இருவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். வேலையை விடச்சொல்ல ரவி மறுத்து விடுகிறார். நான் போனா இன்னொருத்தர் அந்த வேலைக்கு வருவாங்க. அவ்வளவு தான் என்கிறார்.

சீதா அருண் வீட்டுக்கு வர அவர் அம்மா சோகமாக இருப்பதை பார்த்து என்ன ஆனது எனக் கேட்கிறார். மறுபடியும் சஸ்பெண்ட் செய்துவிட்டதாக சொல்கிறார். அருணை பார்க்க ரூமிற்கு வரும் சீதா என்ன நடந்தது என கேட்க முத்து பிரச்சனை குறித்து சொல்லிவிடுகிறார்.

தன் மாமா தான் என தெரியாத சீதா உங்க ரெண்டு பேருக்கும் பல ஜென்ம பகையா இருக்கும் போல இருக்கே என்கிறார். சரி இந்த சஸ்பெண்ட் விஷயத்தை நமக்கு சாதகமா பயன்படுத்திக்கலாம். எங்க மாமாவையும் அக்காவையும் பார்க்க நான் ஏற்பாடு செய்கிறேன் என்கிறார்.

இதை கேட்கும் அருண் சந்தோஷப்பட்டு இதற்காக தானே நான் காத்திருந்தேன் எனவும் கூறுகிறார். பின்னர் அவர்கள் பேசிக்கொண்டு வெளியேற இதை பார்க்கும் அருண் அம்மா நிம்மதி பெருமூச்சு விடுகிறார். கோயிலில் இந்திரா எதையோ யோசித்துக் கொண்டிருக்க அப்போது மீனா அங்கு வருகிறார்.

அவரிடம் இந்திரா உனக்கு நல்ல மாப்பிள்ளையா கிடைச்சது போல. சீதாக்கும் நல்ல மாப்பிள்ளையா கிடைக்க வேண்டும். இப்போ அவன் நடவடிக்கை சரியில்லை. அடிக்கடி போன் பேசுறாள். என்ன நடக்குதுனு நீ கொஞ்சம் விசாரி எனவும் கூறுகிறார். 

 

அந்த நேரத்தில் சீதா வர இருவரும் பேசிவிட்டு நான் விரும்புவரை பார்க்க உன்னையும், மாமாவையும் அழைச்சிட்டு போறேன். நீங்க ஓகே சொன்னா பின்னர் அம்மாவிடம் காட்டலாம் எனவும் கூறுகிறார். மீனாவும் சரியென சம்மதித்து விடுகிறார்.

வீட்டில் ரவி மற்றும் ஸ்ருதி அமர்ந்து டீ குடித்துக்கொண்டு இருக்க அப்போ வரும் ரோகிணி அந்த தங்கசெயினை கொடுக்கிறார். இதை அம்மா வாங்க மாட்டாங்க என ரவியும், வாங்குவாங்க என ஸ்ருதியும் பெட் கட்டிக்கொள்கின்றனர். விஜயா ரோகிணியை மூஞ்சில் அடித்தது போல பேசுகிறார்.

இதுக்கு முன்னாடி இவளுக்கு காசு வந்தப்ப இந்த நகையை இவ வாங்கிட்டு வரலை. இப்போ மட்டும் என்ன? இது கொடுத்தாலும் இவ ஒன்னு இல்லாதவ தானே எனவும் திட்டிக்கொண்டு இருக்கிறார். பின்னர் ரோகிணி செயினை டேபிளில் வைத்துவிட்டு உள்ளே சென்று விடுகிறார்.

அதை மனோஜ் எடுக்கப்போக விஜயா அவரை இழுத்து தள்ளி விடுகிறார். உனக்கா வாங்கிட்டு வந்தா எதுக்கு எடுக்குற எனக் கேட்கிறார். அப்போது முத்து வர அவரும் அந்த செயினை பார்த்து இது என்ன எனக் கேட்க ரோகிணி அம்மாக்காக வாங்கிட்டு வந்ததாக சொல்கிறார்.

அம்மாக்கா எனக் கேட்க விஜயா எனக்கெல்லாம் வேண்டாம் என்கிறார். உடனே முத்து மீனாவை வைத்துக்கொள்ள சொல்ல அவர் நமக்கு எதுக்கு இதெல்லாம். உழைச்சி சம்பாரிப்பேன் என்கிறார். பல குரலிடம் சொல்ல அதற்குள் விஜயா எனக்கு வாங்கினதை நீங்களாம் எடுத்துப்பீங்களா எனக் கூறி அதை பிடிங்கிக்கொண்டு உள்ளே செல்கிறார்.

ரவி பெட்டில் தோற்று விட்டதால் காசை அனுப்ப சொல்கிறார் ஸ்ருதி. அண்ணாமலை அவ முதலையே வாங்கிடுவா என தனக்கு தெரியும் என்கிறார். முத்துவை கிச்சன் அழைத்து செல்லும் மீனா நாளை சீதா கோயிலுக்கு வரச்சொல்லி இருப்பதாக சொல்கிறார். என்ன விஷயம் எனக் கேட்க சீதா ஒருவரை காதலிப்பதாக சொல்கிறார். முத்து அதிர்ச்சியுடன் எழுந்து நிற்கிறார்.

Tags:    

Similar News