Pandian stores2: தங்கமயிலின் மோசமான நிலை? என்ன முடிவு எடுக்க போகிறார் சரவணன்!
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.
கல்லூரியில் உட்கார்ந்து தங்கமயில் அழுதுக்கொண்டே இருக்கிறார். அங்கிருப்பவர்கள் என்ன ஆனது எனக் கேட்க அவர் எதுவும் சொல்லாமல் சமாளித்து விடுகிறார். உடனே தன்னுடய அம்மாவுக்கு கால் செய்கிறார் தங்கமயில்.
அம்மா, அவருக்கு நான் காலேஜ் படிக்கவில்லை என தெரிந்துவிட்டதாக சொல்கிறார். அவருக்கு எப்படி தெரிஞ்சது எனக் கேட்க கல்லூரியில் சர்டிபிகேட் விசாரிக்க வந்தோம். அவர் மத்தவங்க முன்னாடி அசிங்கப்பட கூடாது என்பதால் சொல்லி விட்டதாக சொல்கிறார்.
அவர் அம்மா தங்கமயிலை திட்டுகிறார். நீ ஏன் அவரை காலேஜ் வரை போக விட்ட. வீட்டிலே எதையாவது சொல்லி சமாளிச்சிருக்க வேண்டியது தானே என்கிறார். தங்கமயில் அழுதுக்கொண்டு இருக்கிறார். நான் நம்ம வீட்டுக்கே வந்திடுறேன் எனக் கூற அவர் அம்மா மறுத்து விடுகிறார்.
உன் தங்கச்சிக்கு எப்படி கல்யாணம் செய்றதுனு யோசிச்சுட்டு இருக்கேன். நீ இங்க வர வேண்டாம். அதுதான் உன் குடும்பம். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சமாளி எனப் பேசிக்கொண்டு இருக்கிறார். அந்த நேரம் சரவணன் வர தங்கமயில் ஓடிச்சென்று பேசுகிறார்.
என்ன மன்னிச்சிடுங்க மாமா எனக் கூற உன்கிட்ட இதெல்லாம் நான் கேட்கலை. ஆனா நீ காலேஜ் படிக்கணும் கூட நான் நினைக்கலை. 12வது படிச்சதை சொல்லி இருந்தா கூட நம்ம கல்யாணம் ஜாம் ஜாம்னு நடந்து இருக்கும் என்கிறார்.
மயில் எதுவும் சொல்ல முடியாமல் அழுக அவரை வாயடைக்கும் வகையில் சரவணன் இந்த விஷயத்தினை நான் வீட்டில் சொல்ல போவதில்லை. இதை எங்க அப்பாவால் தாங்கிக்கொள்ள முடியாது. ஆனால் இனிமே உனக்கும் எனக்கும் இருக்கும் உறவில் எதுவும் இல்லை என்கிறார்.
பின்னர் மயிலை வீட்டுக்கு பைக்கில் அழைத்து கொண்டு செல்கிறார். மீனா மற்றும் ராஜி இருவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். ராஜி இன்னும் பைக் ரைட் போகாதது குறித்து அவரை கலாய்த்து கொண்டு இருக்கிறார். அப்போ ராஜி ரூமுக்கு செல்ல அவரை அழைக்கிறார் கதிர்.
என்ன என ராஜி கேட்க வெளியில் அழைத்து செல்லும் கதிர் பைக் ரைட் வரீயா என்கிறார். உடனே ராஜியும் ஓகே சொல்ல இருவரும் சிரித்துக்கொண்டே வண்டியில் செல்கின்றனர்.