Pandian Stores2: குமாருக்கு சரியான ஆப்பு வைத்த அரசி… நீங்க சும்மாவே இருந்து இருக்கலாம்!
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
அரசியை டிரஸ் எடுக்க விட்டு கடுப்பாகிய குமார் அங்கிருந்து கிளம்பி சென்று விடுகிறார். அரசி டிரஸ் எடுத்துக்கொண்டு இருக்கிறார். குமார் வீட்டிற்கு வந்து சக்திவேலிடம் பேசிக்கொண்டு இருக்கிறார்.
அரசியை பழி வாங்க தான் பண்ணியதை சொல்கிறார். பாண்டியன் முன் அவளை கொட்டி கடுப்பேற்றினேன். ஆனால் அவன் என் மேல சாம்பாரை ஊற்றி விட்டாள் என்கிறார். ஏன் என்னிடம் முன்னமே சொல்லவில்லை என சக்திவேல் கேட்கிறார்.
அதெல்லாம் எப்படி எல்லார் முன்னாடியும் சொல்ல முடியும் என்கிறார் குமரவேல். அந்த அரசியை இப்போ பழி வாங்க தான் டிரஸ் கடையில் விட்டு வந்து இருக்கேன் என்கிறார். அதுல என்ன பழி வாங்க போற எனக் கேட்க அவ டிரஸ் எடுத்துட்டு காசு கொடுக்க இல்லாம முழிப்பா என்கிறார்.
என்ன வேண்டாம் என்றாலும் செஞ்சிக்கோ. ஆனால் அவன் பொண்ணு கஷ்டப்படுறதை பார்த்து அந்த பாண்டியன் துடிக்கணும். இப்போ உங்க பெரியப்பா கூட நம்ம பக்கம் இல்ல. அவர் இப்போ நல்லவரா மாறிட்டாரு என்கிறார்.
அரசி டிரஸ் எடுத்துவிட்டு குமாரை தேட அவர் கடையில் இல்லாமல் இருக்கிறார். அங்கு வரும் பெண் டிரஸை பில் போட்டாச்சு என கொடுத்துவிட்டு செல்ல பணம் கட்ட செல்கிறார். முதலில் தயங்கியவர் கார்டை எடுத்து கொடுத்து பின் நம்பரை போடுகிறார்.
17 ஆயிரம் கட்டி முடிக்க குமாருக்கு மெசேஜ் வருகிறது. இதை பார்க்கும் குமார் அதிர்ச்சியாகி கத்த என்ன ஆச்சுடா என்கிறார் சக்திவேல். என் அக்கவுண்ட்டில் இருந்த பணத்தை யாரோ எடுத்துவிட்டதாக சொல்கிறார். எங்க எடுத்தாங்க எனப் பார்க்க சொல்ல அரசியை இறக்கிவிட்ட கடையில் என்கிறார்.
அவளிடம் கார்டை கொடுத்துவிட்டு வந்துதான் இவ்வளோ பேசுறீயா எனக் கேட்க இல்லப்பா எனச் சொல்லி குமார் அடித்து பிடித்து ஓடுகிறார். அங்கு அரசி திமிராக நிற்க ஓடுன உங்களை எப்படி வர வச்சேன் பாருங்க என்கிறார். அவரிடம் எப்படி உனக்கு என் கார்ட் கிடைச்சிது எனக் கேட்க நான் தான் பர்ஸில் இருந்து எடுத்தேன்.
நம்பர் எப்படி போட்ட எனக் கேட்க எந்த லூசாச்சும். போனில் நம்பரை சேவ் செய்து வைப்பாங்களா என்கிறார். எல்லா நம்பரும் தெரியுமா எனக் கேட்க தெரியுமே என்கிறார். பாருங்க எல்லாம் தெரிஞ்சும் ஒரு நம்பரை மட்டும் தான் யூஸ் பண்ணி இருக்கேன்.
குமார் கார்ட்டை கேட்க இது என்னிடம் தான் இருக்கும். பிடிங்க பார்த்தோலோ நம்பரை மாத்துனாலோ அந்த போலீஸிடம் போய்விடுவேன் என மிரட்டுகிறார். தங்கமயில் மற்றும் கோமதி இருவரும் குழந்தை பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றனர். வேலைக்கு தன்னை அனுப்பி விடுவார்களோ என மயிலும் பயத்தில் இருக்கிறார்.