Pandian stores2: வீட்டிற்குள் வந்த அரசி… இனி திண்டாடப்போகும் குமரவேல்… நல்லா இருக்குப்பா!

By :  AKHILAN
Published On 2025-05-30 13:37 IST   |   Updated On 2025-06-05 16:46:00 IST

Pandian stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

பாண்டியன் வீட்டினர் வருத்தத்தில் அமர்ந்து இருக்க ஒவ்வொருவரும் அரசி குறித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். கதிர் அவ செஞ்சதை என்னால ஏத்துக்கவே முடியலை என்கிறார். செந்தில் இவ இப்படி செய்வானே நினைக்கலை எனவும் பேசுகிறார்.

கதிர் எனக்கு இன்னமும் குமார் மேல தான் சந்தேகமா இருக்கு என்கிறார். ஒவ்வொருவரும் பேசிக்கொண்டு இருக்க பாண்டியன் வண்டி சாவியை எடுத்துக்கொண்டு கிளம்புகின்றார். மகன்கள் அவரை தடுக்க ஆனால் பாண்டியன் கோபத்தில் கிளம்பி செல்கிறார்.

மகன்கள் கூட கிளம்பு கோமதி நில்லுங்கடா எங்க போறீங்க எனக் கேட்க அப்பாவுடன் தான் என்கிறார். அவருக்கு இங்க யாரு நிம்மதியை கொடுத்தீங்க. எல்லாருமே அவருக்கு கஷ்டத்தை மட்டும் தானே கொடுத்தீங்க. நானும் அவருக்கு கஷ்டத்த தந்தேன்.

அவருக்கு எல்லாமே இந்த குடும்பமா மட்டும் தான் இருந்துச்சு. நமக்காக தான் உழைச்சிட்டு இருந்தாரு. ஆனா நீங்க யாருமே அவருக்காக எதையுமே யோசிக்கலை எனத் திட்டிக்கொண்டு இருக்கிறார். 

 

கடைக்கு வரும் பாண்டியன் சுத்தம் செய்து உட்கார போக வாடிக்கையாளர் வந்து கல்யாணத்து நாளிலும் ஏன் கடையை திறந்து வச்சிருக்கீங்க என்கிறார். வீட்டில் குமரவேல் அமர்ந்து இருக்க அப்போ வரும் சக்திவேல் மகனே நீ செஞ்சதுல செம சந்தோஷமா இருக்குடா என்கிறார்.

உடனே முத்துவேல் வர சக்திவேல் எனக்கு எதுவும் தெரியாது அண்ணே என்கிறார். முத்துவேல் நீ செஞ்சதுல எனக்கு எந்த விருப்பமுமே இல்லை. ஆனா பொண்ணு ஓடிப்போய் கல்யாணம் செஞ்சிக்கிட்டா எப்படி வலிக்கும் என்பதை இன்னைக்கு அந்த பாண்டியனுக்கு நிரூபிச்சிட்ட எனப் பாராட்டி செல்கிறார்.

சக்திவேல் பின்னர் குமாரை பாராட்டி தள்ளிக்கொண்டு இருக்க குமார் பதற்றத்தோடே இருக்கிறார். சக்திவேல் எனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைச்ச எனப் பேச குமார் கடுப்பில் ஆமாம் என்கிறார். பாண்டியன் கடையில் இருக்க அங்கு வருபவர்கள் அரசி கல்யாணம் குறித்தும் குமார் குறித்தும் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

Tags:    

Similar News