Siragadikka aasai: முத்துவை அசிங்கப்படுத்திய குடும்பம்… அசராமல் பேசிய மீனா… நல்லா தான் இருக்கு?

By :  AKHILAN
Update: 2025-05-14 04:24 GMT

Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.

வீட்டில் இருப்பவர்கள் முத்துவை அசிங்கப்படுத்தி அவன் மேல தப்பு இருக்கும் என்ற பெயரிலே பேசிக்கொண்டு இருக்கின்றனர். ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல் மீனா வெடித்து விடுகிறார். நீங்க பாட்டுக்கும் பேசுறீங்க உண்மை என்னனு தெரியுமா? இவரோட காருல பிரேக் பிடிக்கலை.

அப்போ போகும் போது வண்டிக்கு எதிரா ஸ்கூல் பசங்க ஆட்டோ வந்துச்சு அதுல மோதாம இருக்க வண்டியை திருப்பிட்டாரு. அதனால் தான் விபத்து நடந்துச்சு என்கிறார். இதற்கும் மனோஜ் நக்கலாக நம்புறமாதிரியா இருக்கு என்கிறார்.

யாரும் நம்பலைனாலும் நடந்தது இதுதான். அவரும் இந்த வீட்டில் ஒரு ஆள் தானே. உங்களுக்கெல்லாம் என்ன பண்ணிட்டாரு. உயிர் பிழைச்சு வந்து இருக்காரு. அவருக்கு எதாச்சும் நடந்து இருந்தா சந்தோஷப்பட்டு இருப்பீங்களா என்கிறார்.

உடனே ரவி நான் நம்புறேன் அண்ணி. முத்து எப்பையுமே மத்தவங்களை பத்திதான் யோசிப்பான் என்கிறார். மீண்டும் மனோஜ் திமிராக பேச அண்ணாமலை அவரை அடிக்க வருகிறார். வாயை மூடு எனக் கூறி விஜயாவிடம் மீனா பொய் சொல்லுவாளா எனக் கேட்கிறார்.

சொல்ல மாட்டா தான். இங்க தான் டிசைன் டிசைனா பொய் சொல்ல வேற ஒரு ஆளு இருக்காங்களே எனச் சொல்ல ரோகிணி பல்ப் வாங்கி விடுகிறார். மனோஜும் அமைதியாகி விடுகிறார். ஸ்ருதியின் அம்மாவிடம் அண்ணாமலை உங்க அம்மா இந்த வீட்டு விஷயத்தில எப்ப பாரு தலையிடுறது நல்லா இல்லம்மா என்கிறார். 

 

அவரை அழைக்கும் ஸ்ருதியும் நீ உன் லிமிட்டில் இரும்மா. தேவையே இல்லாம எங்க வீட்டு விஷயத்தில் தலையீடாதே என்கிறார். அவரும் நல்லதுக்கு பேச வந்ததுக்கு எனக்கு தேவை தான் எனக் கிளம்பி விடுகிறார். முத்துவை அழைக்கும் அண்ணாமலை இனிமேல் என்ன எனக் கேட்க லைசன்ஸை கேன்சல் செய்த விஷயத்தை கூறுகிறார்.

விஜயா அப்ப இந்த பிழைப்பும் போச்சா என்கிறார். மீனா தனக்கு தெரிஞ்ச இன்ஸ்பெக்டர் வச்சு பேசிக்கலாம் எனக் கூறுகிறார். மறுபக்கம் சிட்டி தன் ஆட்களை அடி வெளுக்கிறார். ஆள் மேல மோதலையா அவன் தப்பிச்சிடுவான் எனத் திட்டுகிறார்.

வசீகரன் அதெல்லாம் மாட்டிப்பான் என அவரை சமாதானப்படுத்துகிறார். அந்த நேரத்தில் ஒருவன் வந்து திருட்டு நகையை விற்க வேண்டும் என கொடுத்து செல்ல அதை ரோகிணியிடம் விற்கலாம் என முடிவெடுக்கின்றனர்.

மறுபக்கம் மீனா அந்த இன்ஸ்பெக்டரை பார்க்க முத்துவை அழைத்து செல்ல முத்து நான் எந்த தப்புமே செய்யலை சார். அந்த சார் தான் தேவையே இல்லாம என்னிடம் சண்டைக்கே வராரு. என்னைக்கோ நடந்ததை வச்சு இன்னைக்கு பேசுறாரு என்கிறார். நீ அவனை வீடியோ எடுத்து மாட்டி விட்டதுக்கு பழி வாங்குறான். நான் பேசி பார்க்கிறேன் என முத்துவை அனுப்புகிறார்.

Tags:    

Similar News