Siragadikka Aasai: மனோஜால் கடுப்பான விஜயா… இனிமே ரோகிணிக்கு அடுத்த ஆப்பு காத்திருக்கும் போலயே!
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
மாடியில் ரவி, மனோஜ் மற்றும் முத்து மூவரும் குடித்துக்கொண்டே பேசிக்கொண்டு இருக்கின்றனர். தன்னுடைய பார்க் நண்பர் சொன்னதை மனோஜ் அவர்களிடம் சொல்ல அவர்களும் நீ அம்மா பேச்சையே கேட்குற எனச் சொல்கின்றனர்.
ரவி தன்னை ஸ்ருதி வேற பிசினஸ் தொடங்க சொல்லி வற்புறுத்துவதாக சொல்கிறார். அது எப்படி நல்லா இருக்கும்? நம்ம காசுல ஆரம்பிச்சா தானே அது கெத்தா இருக்கும் என்கிறார். உடனே முத்து மீனா சீதா விஷயத்தில் கெடுப்பிடியாக இருப்பதாக கூறுகிறார்.
ரவியும் சீதா முடிவு செஞ்சா சரியா தானே இருக்கும் எனக் கூற அப்படியில்லை. அந்த அருண் சரி கிடையாது. அவனை கட்டிக்கிட்டா கண்டிப்பா சீதா சந்தோஷமா இருக்க மாட்டா என்கிறார். மூவரும் பேசிக்கொண்டு இருக்கும் போதே மருமகள்கள் மூவரும் கிச்சனில் இருக்கின்றனர்.
சீதா விஷயத்தினை மீனா சொல்ல ஸ்ருதி தன்னை விட பெரிய இடமா இருக்கும் என நினைக்கிறாரா எனக் கேட்கிறார். அப்படியில்லை அவங்க ரெண்டு பேருக்கும் ஏற்கனவே சண்டை இருக்கு என்கிறார். முத்துவிற்கு ஈகோ அதிகம் என்கிறார் ரோகிணி.
அதெல்லாம் இல்லை. அருணை தப்பா புரிஞ்சிட்டு இருக்காரு என்கிறார் மீனா. நீத்து விஷயத்தினை சொல்கிறார் ஸ்ருதி. ரோகிணி மனோஜ் ஆண்ட்டி பேச்சை கேட்டு ரொம்ப பண்றான் எனக் கூற எங்க ஹஸ்பெண்ட்டை விட மனோஜ் பரவாயில்லை என்கிறார்.
அவன் என்னிடம் சரியில்லை என ரோகிணி கூற நாங்க எந்த தப்புமே செய்யலை. அவங்களே எங்க பேச்சை கேட்கிறது இல்லை என்கிறார் ஸ்ருதி. பின்னர் மறுநாள் காலையில் மனோஜ் விஜயாவிடம் பேச வேண்டும் என்கிறார். விஜயா என்ன விஷயம் எனக் கேட்கிறார்.
இனிமேல் ரோகிணியும் ஷோரூம் வரட்டும் எனக் கூற மனோஜ் சந்தோஷப்படுகிறார். முத்து அவசரப்படாத அம்மா இன்னும் முடிக்கலை எனக் கூற ஆனால் இனிமே நீ என்னிடம் பேசக்கூடாது என்கிறார். அப்போ அந்த நேரத்தில் சரியாக சீதா கால் செய்து மீனாவிடம் வீட்டிற்கு அருணின் அம்மாவும் அவரும் வந்து இருப்பதாக கூறுகிறார்.