Siragadikka Aasai: சீதா கல்யாண நகையில் கை வைத்த ரோகிணி… நீங்க திருந்தவே இல்லையா?
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
ரோகிணி கத்த விஜயா அவரை திட்டிவிட்டு செல்கிறார். நீ தூங்கலைனா எங்க தூக்கத்தையும் கெடுக்காம போய் தூங்கு என்கிறார். சிட்டி மற்றும் வசீகரன் குடித்து கொண்டு இருக்க அவருக்கு ரோகிணி கால் செய்து முத்துவிடம் எதுவும் சொல்லாத என்கிறார்.
நீ காசை கொடுத்தா நான் ஏன் சொல்ல போறேன் என்கிறார். அதுக்கு தான் உனக்கு போன் பண்ண முத்துவோட பொண்டாட்டி மீனா தங்கச்சிக்கு கல்யாணம் முடிவு பண்ணி இருக்காங்க. அதுக்கு என்ன செய்ய சொல்ற என்கிறார். அவளுக்கு நகை வாங்கி இங்க தான் இருக்கும்.
நான் சொல்றப்ப வந்து நீ எடுத்துக்கோ என்கிறார். ஏன் நீயே எடுத்துட்டு வந்து கொடுக்க வேண்டிதானே என்கிறார். நான் எடுத்தா வீட்டில் இருப்பவர்கள் எடுத்தாங்கனு தெரிஞ்சிடும். அப்போ என்னை வந்து மாட்டிக்க சொல்றீயா என்கிறார். ஆள் இல்லாதப்ப சொல்றேன் என்கிறார்.
சிட்டி இதை கேட்டு நகை போச்சுனா காசும் கிடைக்கும். அந்த முத்து வீட்டு கல்யாணமும் நின்னுடும் என்கிறார். நான் போறேன் எனக் கூற வேணாம் நான் தான் போவேன். அப்போதான் அந்த ரோகிணிக்கு என் மேல பயம் இருக்கும் என்கிறார்.
அடுத்தநாள் காலை விஜயா தன்னுடைய டான்ஸ் கிளாஸை எடுத்துக்கொண்டு இருக்க அப்போ முத்து தாம்பூலத்துடன் வர மறுபடியும் கிளாஸ் எடுத்து என் கழுத்தை சுளுக்க வந்து இருக்கீயா என்கிறார். பயப்படாதீங்க நான் பார்வதி ஆண்ட்டியை பார்க்க வந்து இருக்கேன் எனக் கூறுகிறார்.
சீதாவின் கல்யாண பத்திரிக்கையை கொடுத்து நீங்க கண்டிப்பா வரணும் என்கிறார். உனக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கேப்பா எனக் கூற இரு என பார்வதியும் கொஞ்சம் காசை கொடுத்து இதை கல்யாண செலவுக்கு வச்சிக்கோ என்கிறார்.
பின்னர் முத்து விஜயா கிளாஸில் இருக்கும் காதலர்களை பார்த்து சந்தேகப்பட அவர்கள் சமாளித்து விடுகின்றனர். பின்னர் மீனா மற்றும் ஸ்ருதி நகை எடுத்துட்டு வந்து சாமி படத்தின் முன் வைத்து கும்பிடுகின்றனர். பின்னர் அவர்கள் வெளியில் கிளம்புகின்றனர்.
பின்னால் வரும் ரோகிணி சாவி இருக்கும் இடத்தினை பார்த்துக்கொண்டு வெளியில் வந்து பிஏவிடம் சொல்லி விட்டு செல்கிறார். அவரும் உள்ளே வந்து நகையை எடுத்துக்கொண்டு வெளியேற அந்த நேரத்தில் மனோஜ் வந்து விடுகிறார். அவர் பிஏவை பிடிக்க பார்க்கிறார்.
ஆனால் பிஏ தன்னிடம் இருந்த இன்னொரு முகமூடியை அவருக்கு போட்டு அடிக்க பார்க்கிறார். ஆனால் சரியாக மீனா மற்றும் ஸ்ருதி வந்து இருவரையும் தாக்க முயற்சிக்கின்றனர். ஒருகட்டத்தில் பிஏ எஸ்கேப் ஆகிவிட மனோஜையும் திருடன் என அடித்து கொண்டு இருக்கின்றனர்.