மீண்டு வந்த மனோஜ்… ஆனா பேச்சு மட்டும் குறைய மாட்டிங்குதே… சிறகடிக்க ஆசை அப்டேட்!

By :  Akhilan
Update:2025-03-04 09:51 IST

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியின் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த அப்டேட்கள்.

மனோஜிற்கு கண்பார்வை திரும்ப வந்துவிட அவரை ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து அழைத்து வருகின்றனர். விஜயா மற்றும் ரோகிணி இருவரும் மனோஜை பிடித்துக்கொண்டு வர அவர் எனக்கு கண்ணு தெரியுது என்கிறார். உடம்பு வலி இருக்கும் எனச் சொல்லி தாங்கி வருகின்றனர்.

மீனா ஆரத்தி தட்டை எடுத்துக் கொண்டு வர மனோஜ்க்கு விஜயா ஆரத்தி எடுக்கிறார். இனி அவனை துரத்தி போகாத என முத்து கூற உடம்பு சரியில்லாதவரிடம் இப்படிதான் பேசுவீங்களா என ரோகிணி கேட்கிறார். ஹீரோவாக பார்த்தான். அது காமெடியாக மாறிட்டதாக கலாய்க்கிறார்.

 

 

உடனே விஜயா, மனோஜ் மற்றும் ரோகிணியை வீட்டில் ரெஸ்ட் எடுங்க. கோயிலில் அங்க பிரதசனம் செய்வதாக வேண்டி இருக்கேன் என்கிறார். மனோஜ் செஞ்சிட்டு வந்துருமா எனக் கூற நான் செய்யலை. நீங்க ரெண்டு பேரும் தான் போய் செஞ்சிட்டு வரணும் என்கிறார்.

ஸ்ருதி ஹோட்டலில் வேலை செய்து கொண்டு இருக்க அங்கு வரும் அவர் அம்மா நீ ஸ்டுடியோவிற்கு செல்வதே எனக்கு பிடிக்கலை. இதுல இது வேறயா என்கிறார். உங்க வீட்டில் கஷ்டம்னு உன்னை இரண்டு வேலை செய்ய சொல்றாங்களா என்கிறார்.

தெரியாம பேசாத மம்மி. நான் விருப்பப்பட்டு தான் செய்றேன் என்கிறார். உடனே ரவியிடம் போய் திட்டிவிட்டு செல்கிறார். இதில் ரவி, ஸ்ருதியிடம் கோபப்படுகிறார். ஆனால் ஸ்ருதி மம்மி சொன்னதை நீ கண்டுக்காத என கேஷுவலாக சொல்லி விடுகிறார்.

அடுத்து வீட்டில் எல்லாரும் உட்கார்ந்து கொண்டு இருக்க முத்து பில்லை நீட்டுகிறார். இதை பார்த்த மனோஜ் ஹாஸ்பிட்டல் பில்லை ஏன் என்னிடம் கொடுக்கிற எனக் கேட்க உன் பில்லை உன்னிடம் தான் கொடுக்க முடியும் என்கிறார்.

அதை வாங்கி மனோஜ் பார்க்க ஒரு பேப்பரில் சில தொகைகள் இருக்க இது என்னவென்று கேட்க அது நீ அடிச்சவங்களுக்கு கொடுத்தது என்கிறார். பில் வாங்குனியா. அவங்க நம்பருக்கு போன் போட்டு கேட்கிறேன் என்கிறார் மனோஜ்.

உடனே ஸ்ருதி அப்போ உங்களுக்கு சரியானது. அவங்களுக்கு தெரிஞ்சிடும்ல என பயமுறுத்துகிறார். விஜயா வீட்டில் ஹாஸ்பிட்டலுக்கு செலவு செஞ்சிட்டு இப்படிதான் கேட்பாங்களா என்கிறார். மத்தவங்களிடம் கடன் வாங்கி கொஞ்சம் கொஞ்சமா சேர்த்தது. கொடுக்கணும் என்கிறார்.

அண்ணாமலை அவன் கடன் வாங்கி கட்டிருக்கான். அவனுக்கு கொடுக்கணும் என்கிறார். ஹாஸ்பிட்டலுக்கு கட்டுனதெல்லாம் கணக்கும் பாக்கிறான் எனக் கேட்க நான் தரேனு சொன்னப்ப அவன் வேணானு செஞ்சான். ஒழுங்கா கொடுத்துரு என்கிறார்.

ரோகிணி இந்த பில்லை பார்த்துவிட்டு முத்துவிற்கு அனுப்பி விடுவதாக சொல்கிறார். விஜயா அதான் தரேனு சொல்டாங்களே. வாங்கிக்கோங்க என்கிறார்.

Tags:    

Similar News