விஜயாவுக்கு இந்த வாய் அடங்காதே! மனோஜுக்கு கண் என்ன ஆக போகுதோ?

By :  Akhilan
Update:2025-03-03 09:35 IST

Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த தொகுப்புகள் இதோ.

வீட்டில் விஜயா ஹாஸ்பிடல் போனோம் இந்த மீனா எங்க போனா? அவ வீட்ல ஒருத்தருக்கு இப்படி நடந்திருந்தால் இப்படித்தான் இருப்பாளா? அவன் எங்க போனா கூடவே போய்ட்டானோ? பாதியில் வந்தவர்களுக்காக கூட பொறந்தவனே இவன் மதிக்க மாட்டான் என சத்தம் போடுகிறார்.

என் பையனுக்கு இப்படியாக காரணமே இவங்க ரெண்டு பேர்தான் என விஜயா பேச அண்ணாமலை அவங்க என்ன பண்ணாங்க எனத் திட்டுகிறார். ஆமா அவங்க காசு காசுனு நச்சரிச்சதால தான் என் பையன் அந்த ஆள துரத்திட்டு போயி ஆக்சிடென்ட் ஆச்சு என்கிறார்.

இப்ப கூட மீனா அவங்க வீட்ல போயி இங்க நடந்ததை சொல்லி சந்தோஷப்பட்டு இருப்பா என விஜயா பேசிக்கொண்டே போக அண்ணாமலை அவரை நிறுத்துகிறார். பேசி முடிச்சிட்டியா என கேட்க மேலும் மீனா மற்றும் முத்துவை திட்டுகிறார்.

 

உடனே அண்ணாமலை விஜயாவை கைபிடித்து அழைத்து டைனிங் டேபிளில் காட்ட அங்கு சாப்பாடு தயாராக இருக்கிறது. மீனா மற்றும் முத்து ஏற்கனவே ஹாஸ்பிட்டல் போய்விட்டதையும் கூறுகின்றனர். மேலும் ரவி மனோஜிற்கு ஹாஸ்பிடல் செலவையும் முத்து தான் பார்த்துக் கொண்டான் எனவும் கூறுகிறார்.

உடனே ஸ்ருதி ஒன்னும் தெரியாம படபடன்னு பேசுவாங்களே அது என்ன சொல்லுவாங்க. அவசர குடுக்கை என ரவி கூற அந்த குடுக்கை நீங்கதான் என விஜயா கலாய்த்து விட்டு செல்கிறார். முத்து மற்றும் மீனா இருவரும் ஹாஸ்பிடலுக்கு சென்று சாப்பாட்டை கொடுக்கின்றனர்.

விஜயா கோவிலுக்கு சென்று வந்து மனோஜை பார்த்து அவருக்கு விபூதி வைத்து விடுகிறார். மனோஜ் ரூமுக்கு மாற்றிவிட்டு கட்டு பிடிக்கப் போவதாகவும் ஒருவர் மட்டும் உள்ளே இருக்கலாம் எனவும் நர்ஸ் வந்து கூறுகின்றனர். விஜயா நான் இருக்க தான் என் மகன் ஆசைப்படுவான் என்கிறார்.

ஆனால் நர்ஸ் அவர் மனைவியை கூப்பிட்டதாக சொல்லிவிடுகிறார். மனோஜ்க்கு மருத்துவர் கட்டு பிரித்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

Tags:    

Similar News