கண் பார்வை இழக்கும் மனோஜ்… கலங்கும் குடும்பம்… துணை நிற்கும் முத்து - மீனா!

By :  Akhilan
Update:2025-03-01 09:08 IST

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.

ஸ்ருதி மற்றும் மீனா இருவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். மனோஜ் சிலரை தள்ளிவிட்டு அடிப்பட வைத்த பிறகே அவருக்கு அடிப்பட்டதாக சொல்கிறார். ஸ்ருதி இதுவேறயா எனக் கேட்கிறார். இருவரும் ரோகிணிக்காக வருத்தப்படுகின்றனர்.

மனோஜ் அடிப்பட்டு ஹாஸ்பிட்டலில் இருக்க அவர் கண்ணில் ஒரு ஆபிரேஷன் செய்து விடுகின்றனர். விஜயா பதறி வந்து என் பையன் எப்படி இருக்கான் எனக் கேட்க அவர் கொஞ்சம் கிரிட்டிக்கல் தான். பாக்கலாம் என்கிறார். அவரை பதட்டப்படுத்தாம பாருங்க என்கிறார்.

எல்லாரும் போய் மனோஜை பார்க்க அவர் எனக்கு எதுவுமே தெரியலை. என் கண்ணு போச்சா என பதறுகிறார். அதெல்லாம் இல்ல நீ அமைதியா இரு என்கின்றனர். விஜயாவிடம் அம்மா நீ என்னை கண்ணேனு தான கொஞ்சுவ இப்போ எனக்கு கண்ணே தெரியலை என்கிறார்.

ரோகிணி என் கண்ணை கொடுத்தாவது உன்னை பார்க்க வைப்பேன் என்கிறார். மனோஜ் நீ தான் என் உலகம் ரோகிணி. உன்னை பார்த்தா போதும் என்கிறார். அண்ணாமலை என் கண்ணை எடுத்துக்கோ கடவுளே. என் பையனுக்கு கண்ணை கொடு என்கிறார்.

ரவி மற்றும் முத்து இருவரும் அவரை சமாதான செய்ய என் கண்ணு போச்சா என பதறுகிறார். ஸ்ருதி எல்லாரையும் அமைதிப்படுத்துகிறார். மீனா மற்றும் முத்து வெளியில் வருகின்றனர். மனோஜ் குறித்து வருத்தமாக பேசிக்கொண்டு இருக்கும் போது போலீஸ் வருகின்றனர்.

கான்ஸ்டபிளை அடித்துவிட்டதாக கூறுகின்றனர். இன்ஸ்பெக்டர் மனோஜை விசாரிக்க போக அவர் நடந்த விஷயங்களை கூறுகிறார். அவருக்கு முந்திக்கொண்டு முத்து கேள்விகளை கேட்க அவர் முறைக்கிறார். சீக்கிரம் அவனை கண்டுபிடித்துவிடலாம் எனக் கூறிவிட்டு செல்கிறார்.

பணம் கட்ட சொல்லி பில் வர முத்து மற்றும் மீனா தங்களுக்கு தெரிந்தவர்களிடம் கேட்டு பணம் ஏற்பாடு செய்கின்றனர். மறுபக்கம் ரோகிணி மனோஜுக்கு சாப்பாடு ஊட்டிவிடுகிறார். அவருக்கு கண் தெரியாதது குறித்து மனோஜ் கவலையாக பேச அவருக்கு ஆறுதல் சொல்லுகிறார்.

Tags:    

Similar News