மனோஜிற்கு ஆபத்தான நிலைமை… பாக்கியா-கோபி என்னங்க ஆச்சு? தங்கமயிலின் பொய்க்கு தேவதான்!
Vijay serials: விஜய் தொலைக்காட்சியில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் நடக்க இருக்கும் எபிசோடுகளுக்கான வாரப் புரோமோ வெளியாகி இருக்கிறது.
சிறகடிக்க ஆசை: நன்றாக சென்று கொண்டிருந்த சீரியலில் எப்பொழுது ரோகிணி மாட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்காக பல வழிகளில் இயக்குனர் ஆசை காட்டி வந்தார். சரி ஏதோ ஒரு வழியில் அவர் சிக்கி விடுவார் என்பது ரசிகர்களின் எண்ணமாக இருந்தது.
ஆனால் அதிர்ச்சி தரும் விதமாக மனோஜ் தற்போது விபத்தில் சிக்கியிருக்கிறார். அவருக்கு கண்ணில் ஆபரேஷன் முடிந்து தற்போது சிகிச்சையில் இருக்கிறார். இதில் வெளியாக இருக்கும் புரோமோவில் கண்கட்டை அவிழ்க யாருக்கரோகிணி மட்டும் வேண்டும் என அவர் கேட்கிறார்.
கண்கட்டை அவிழ்த்த உடன் மனோஜ் தனக்கு கண் கூசுவதாக கூறுகிறார். தொடர்ந்து ரோகிணி வெளியில் வந்து அழுகிறார். இதனால் மனோஜின் கண்பார்வை பறிபோய்விட்டதோ என ரசிகர்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பாக்கியலட்சுமி: கிட்டத்தட்ட இந்த சீரியல் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. எழில் திரைப்படத்தை முடித்து விட்டார். ஜெனி தனக்கு இரண்டாவது பிள்ளை பிறந்து வீட்டிற்கு வருகிறார். இப்பொழுது ஈஸ்வரி மீண்டும் எழில் மற்றும் அமிர்தாவிடம் குழந்தை குறித்து பேசுகிறார்.
இதை பார்த்து கடுப்பான பாக்கியா கோபியிடம் அவர் அம்மா குறித்து ஜாடையில் திட்டிக் கொண்டிருக்கிறார். தற்போது இதை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் கிளைமேக்ஸ்ல வைக்கணுமா? முடிச்சி விடுங்கப்பா எனக் கலாய்த்து வருகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்2: அரசி ஒரு பக்கம் காதல் செய்து கொண்டிருக்கிறார்.. தங்கமயில் தன்னுடைய பள்ளி வேலையை விட்டுவிட்டு ஆபிஸுக்கு வேலைக்கு போவதாக கூறி ஒரு ஹோட்டலில் வெயிட்டராக வேலைக்கு சேர்ந்து இருக்கிறார்.
இதை போனில் கேட்கும் தங்கமயிலின் அம்மா பாண்டியனிடம் பேசி அவரை வேலைக்கு செல்லாமல் காப்பாற்ற வர அவர் வேலைக்கு போவதே சரி என்கிறார்.