ஓவரா சந்தோசப்படாதீங்க விஜயா… தன் காசுக்காக போராடும் மீனா.. என்ன நடக்க போதோ?

By :  Akhilan
Update:2025-03-12 08:46 IST

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.

சிந்தாமணி மீனா ஏமாந்த விஷயம் குறித்து விஜயாவுக்கு கால் செய்து சொல்கிறார். 2 லட்ச ரூபாய் நஷ்டம் அடைந்த விஷயமே போதும் என விஜயா மனசாட்சி இல்லாமல் பேசுகிறார். என்ன செஞ்சீங்க எனக் கேட்க சிந்தாமணி ஸ்வீட்டுடன் வந்து சொல்வதாக சொல்லுகிறார்.

விஜயா பூ கட்றவளுக்கு நஷ்டம் ஆச்சா என சந்தோசப்படுகிறார். உடனே ரவிக்கு கால் செய்து உன் ரெஸ்டாரெண்டில் இருந்து சாப்பாடு எடுத்து வரச் சொல்கிறார். சந்தோஷமா இருப்பதாக சொல்லிவிடுகிறார். ஆனால் இதை கேட்கும் ஸ்ருதி மீனா மற்றும் முத்துவுக்கு பிரச்னை இருந்தால் தான் உங்க அம்மா சந்தோஷமா இருப்பாங்க என்கிறார். 

 

பாயிண்ட் சரிதான் என்கிறார் ரவி. வீட்டுக்கு போய் பார்த்துக்கலாம் என்கிறார் ஸ்ருதி. கல்யாண ஆர்டரில் மேனேஜர் காசை ஏமாற்றி விடுகிறார். இதனால் ஓனரிடம் சென்று மீனா நியாயம் கேட்க அவரும் அந்த மேனேஜரை அழைத்து விசாரிக்கிறார். அவரின் மீனா கையெழுத்து போட்டு கொடுத்த பத்திரத்தை காட்ட ஓனர் மீனாவை திட்டி அனுப்பி விடுகிறார்.

வீட்டிற்கு ரவி மற்றும் ஸ்ருதி வர விஜயா சந்தோசமாக சாப்பிடுகிறார். ரோகிணியிடம் மீனா பிரச்னையை சொல்லி கொண்டு இருக்கிறார். உங்களுக்கு எப்படி தெரியும் எனக் கேட்க விஜயா தெரியும் தெரியும் என சமாளிக்கிறார்.

மீனாவுக்கு பிரச்னை இருப்பதை தெரிந்த ரவி மற்றும் ஸ்ருதி விஜயாதான் காரணமாக இருப்பார் என சந்தேகம் கொள்கின்றனர். நான் தெரிஞ்சிக்கிட்டு வந்து பேசுவதாக சொல்கிறார். முத்து திடீரென வருவதாக காட்ட அவரிடம் இந்த விஷயத்தை சொல்கிறார்.

முத்து கோபமாக சென்று மேனேஜரை திட்டி கத்தியை குத்துவது போல மீனா கனவு கண்டு விழிக்கிறார். இதனால் அப்போது முத்து கால் செய்யும் போதும் பிரச்னையை சொல்லாமல் தவிர்த்துவிடுகிறார். இதில் இருந்து மீனா எப்படி தப்பிக்க போகிறார்.

Tags:    

Similar News