மீனாவுக்கு நெருங்கும் பிரச்னை… வெளியில் போகும் முத்து… என்ன நடக்க போகுது சிறகடிக்க ஆசையில்?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டில் என்ன நடக்க போகிறது என்ற சிறப்பு தொகுப்புகள்.
அண்ணாமலை வீட்டில் இருந்து வெளியே போகும் முத்துவை அழைத்து அன்பானவர்களை பாத்துட்டு போனா கண்டிப்பா நல்லது நடக்கும் என்கிறார். ஆனால் முத்து பொண்டாட்டியை பாத்துட்டு போனா வெளியில பெரிய பிரச்னை வந்துட போகுது பயம் என்கிறார் முத்து.
அண்ணாமலை பின்னால் கண்ணை காட்ட அங்கு மீனா நிற்பதை பார்த்து முத்து ஜர்க்காகி விடுகிறார். பின்னர் அண்ணாமலை சென்று விட மீனாவை சமாதானம் செய்துவிட்டு முத்து கிளம்பி செல்கிறார். கோயிலில் மனோஜ் மற்றும் ரோகிணி அங்கபிரதட்சனம் செய்கின்றனர்.
அப்போது வாசலில் கஸ்டமருக்காக முத்து காத்திருக்க பார்வதி மனோஜை பார்க்க வந்தியா எனக் கேட்க இல்லையே என்கிறார் முத்து. அவங்க உள்ளதான் வேண்டுதல் செஞ்சிட்டு இருக்காங்க என்கிறார். சரி வாங்க உள்ள போகலாம் நல்ல டைம் பாஸ் ஆகும் என்கிறார்.
மனோஜ் மற்றும் ரோகிணி இருக்க அங்கு வருகிறார் முத்து. பின்னர் சாமி கும்பிட போக வேண்டுதல் செஞ்சிட்டீங்களா என்கிறார் ஐய்யர். உடனே முத்து மீனாவுக்காக சாமி கும்பிட்டு வரும் லாபத்தில் ஒரு சதவீதம் தருவதாக வேண்டிக்கொள்ள இதை பார்த்த மனோஜ் 10 சதவீதம் தருவதாக வேண்டிக்கொள்கிறார்.
மீனா பூ டெக்கரேஷனுக்கு லோன் எடுக்க அவர மனோஜர் அவர் எலிஜிபில் இல்லை எனக் கூறுகிறார். சோகமாக மீனா வர அங்கிருப்பவர் ஒரு பைனான்ஷியர் நம்பரை கொடுக்கிறார். அதை வாங்கிக்கொண்டு மீனா செல்ல போக சத்யா வருகிறார்.
ஃபுட் ஆர்டரை கொடுத்துவிட்டு தானும் வருவதாக சொல்கிறார். மீனா இந்த விஷயத்தை முத்துவிடம் சொல்கிறார். உடனே முத்து, ரவிக்கு கால் செய்து மீனா பிரச்னையை சொல்லி அவளா கேட்க மாட்டா கொஞ்சம் பணம் மட்டும் ஹெல்ப் செய்யுங்க என்கிறார்.
ரவி நாங்க பாத்துக்கிறோம். நீ பத்திரமா போயிட்டு வா என்கிறார். ரவி கால் செய்து மீனாவிடம் பணம் கிடைச்சிதா எனக் கேட்க இல்லை என்கிறார். ஸ்ருதி நீங்க கவலைப்படாதீங்க. எப்ப வேணாலும் என்னிடம் வாங்கிக்கோங்க என்கிறார். மீனா ஒரு பைனான்சியரை பார்க்க வந்ததாக சொல்லுகிறார்.
ரவி ஸ்ருதியிடம் நீ அண்ணிக்காக இவ்வளவோ செய்றதை பார்த்தா ஆச்சரியமா இருக்கு என்கிறார். மீனா பைனான்சியரை பார்த்து பேசிக்கொண்டு இருக்கிறார்.