Siragadikka Aasai: முத்துவை கொலை செய்த கூட்டு சேரும் ரோகிணி… திருந்துறதா ஐடியாவே இல்லை!
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு தொகுப்புகள்.
மனோஜ் திருட்டு போன பணம் கிடைத்துவிட்டதாக வீட்டில் வந்து சொல்லிக் கொண்டிருக்கின்றனர். மீனா மற்றும் முத்து இருவரும் வேண்டுமென்றே போலீசுக்கு தகவல் கொடுத்ததாக ரோகிணி அவர் மீது குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் அண்ணாமலை இது மிகப்பெரிய தொகை. அவனை அடிச்சு அவனுக்கு ஏதாவது ஆகிட்டா அதுக்கு காரணம் முத்து தான் என ஆகிடும். அதனால் போலீசுக்கு போனதுதான் சரி என்கிறார். உடனே மனோஜ் அவன் பொண்டாட்டி பணம் தொலஞ்சப்போ போலீசுக்கு அவன் போகலையே என்கிறார்.
உடனே முத்து அது வெறும் 2 லட்சம் பணம் தான். அதுமட்டுமில்லாமல் போலீசுக்கு போயிருந்தா அந்த சிந்தாமணி அந்த பணத்தை அப்படியே ஆட்டைய போட்டு இருக்கும். நாங்க வீட்டுக்குள்ள அந்த பணம் இருக்குன்னு தெரிஞ்சுதான் போகணும் என்கிறார். உடனே சுருதி மனோஜின் பணமும் எங்களுக்கு என தெரிந்து கொண்டால் அங்கேயும் ஒரு ரெய்டு போடலாம் என்கிறார்.
முத்து அந்த பணம் கிடைக்கணும்னு தான் கதிரை பிடிச்சோம். அப்படி வேணாம் நினைச்சிருந்தா அவனை பிடிச்சிருக்கவே வேண்டாமே என்கிறார். மனோஜ் அது எனக்கு வர வேண்டிய பணம் எனக் கூற அது ஜீவாகிட்டேந்து வாங்கின 30 லட்சத்துல தான கடைய தொடங்குன என்கிறார்.
அது அப்பாவோடது எனக் கூறுகிறார். விஜயா மொத காசு வரட்டும் வாயை மூடுங்க என்கிறார். ரோகிணிக்கு பி ஏ வசீகரன் கால் செய்து எனக்கு உடனே பணம் வேணும் என்கிறார். இதனால் அதிர்ச்சி அடையும் ரோகிணி தன்னிடம் காசு இல்லை என்று கூற நீ பெரிய பிராடு தான் நினைச்சேன். ஆனா எனக்கு கொலை செய்கிற அளவு போயிட்ட.
அதனால நீ காசு கொடுக்கவில்லை என்றால் உன்னை மாட்டி விட்டுவிடுவேன் என அவர் சொல்ல ரோகிணி பயத்தில் சிட்டிக்கு கால் செய்கிறார். பி ஏ மற்றும் சிட்டி ஒன்றாக இருப்பதால் எங்க அடிச்சா எங்க வரும்னு எனக்கு தெரியாதா என ரோகிணியின் போனை அட்டென்ட் செய்கிறார்.
சொல்லுங்க மேடம் எனக் கூற எனக்கு அந்த பிஏ கால் செய்து மிரட்டியதாக கூறுகிறார். அவனை நான் தட்டி வைக்கிறேன் ஆனால் அதில் எனக்கு என்ன லாபம் என கேட்கிறார். ரோகிணி தயங்க முத்துவின் கார் சாவி தனக்கு பதினைந்து நிமிடம் வேணும் என கேட்கிறார்.
நடு இரவில் யாருக்கும் தெரியாமல் அந்த கார் சாவியை ரோகிணி கொடுத்து விடுகிறார். சிட்டி முத்துவின் காரில் பிரச்னை செய்து வைக்கிறார். அடுத்த நாள் காலை முத்து வெளியில் கிளம்பி கொண்டிருக்க பழைய துணிகளை குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அப்பொழுது விஜயாவிற்கு ரோகிணி சப்போர்ட் செய்ய உன்கிட்ட எல்லாம் என்ன பத்தி யாரும் பேச சொன்னாங்களா என மூக்கை உடைக்கிறார் விஜயா.