ரோகிணிக்கு ஓவர் ஜால்ராவா இருக்கே… மீண்டும் எஸ்கேப்பா? கடுப்படிக்கும் கதைக்களம்…

By :  Akhilan
Update: 2025-01-22 03:38 GMT

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டின் தொகுப்புகள்.

மலேசியா போகலாம் எனக் கூற ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். அண்ணாமலை வேணுமா எனக் கேட்க விஜயாவே அவனே சொல்றான். ரோகிணி வீட்டையுமே பார்க்கலாம் என ஒத்துக்கொள்கிறார். ரோகிணி மனோஜை வைத்து காரியம் சாதிக்க பார்க்க அவரும் உளறிவிட்டு செல்கிறார்.

முத்துவிடம் இப்போ எதுக்கு மலேசியா என மீனா கோப்பட அதெல்லாம் ஒரு காரியமா தான் செஞ்சேன். நாம இப்போ மலேசியா போறதுக்கு ரோகிணி எதுவும் பிரச்சனை செய்யும். அப்போ அதை பற்றி தெரிஞ்சிக்கலாம் என இருவரும் திட்டமிடுகின்றனர் (ஒன்னும் நடக்காதுப்பா)

எல்லாரும் கிளம்பலாம் எனக்கூற ரவி வரவில்லை என தயங்குகிறார். தொடர்ந்து ரோகிணி நானும் வரவில்லை. ஷோரூமில் வேலை இருப்பதாக சமாளிக்கிறார். இதனால் மீனா மற்றும் முத்து தங்களுக்கிடையே சிரித்து கொள்கின்றனர். ஆமா ஆமா வேலையை பாருங்க எனக் கூற முத்து பாஸ்போர்ட் ஆபிஸில் கொடுக்க அப்ளிகேஷனை எடுத்து செல்கிறார்.

ரூமில் ரோகிணி அழுது எங்க அப்பா ஜெயிலுக்குள்ள இருக்கும் போது இவங்களாம் போய் பார்க்கிறது நல்லாவா இருக்கும். இவங்களை போக வேண்டாம்னு சொல்லு என்கிறார். உடனே மனோஜ் விஜயாவிடம் பேசப்போக அவர் தன்னால் சும்மா இருக்க முடியாது. சம்மந்தியை போய் பார்த்துவிட்டு வந்து விடுவதாக சொல்கிறார்.

ஸ்ருதி வீட்டிற்கு வந்து ரோகிணி மற்றும் மனோஜ், முத்து மற்றும் மீனா இருவரிடமும் எவ்வளவு நேரம் ஒன்றாக நேரம் செலவழிப்பீர்கள் எனக் கேட்க 6 மணி நேரம் மேல் சொல்ல கோபமாக ஸ்ருதி நாங்க 2 மணி நேரத்திற்குள் தான் ஒன்னா இருக்கோம் என்கிறார்.

உடனே மலேசியா ஒன்றாக சென்றால் நேரம் செலவழிக்கலாம் எனக் கூற ஸ்ருதியும் ஒப்புக்கொள்கிறார். இதில் ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். உடனே வித்யா வீட்டிற்கு வந்து உண்மையை சொல்ல அவரும் அதிர்ச்சி அடைக்கிறார். உண்மையை வீட்டில் சொல்ல சொல்கிறார்.

அதற்கு ரோகிணி இன்னொரு திட்டத்தை போட்டு மலேசியா மாமாவை வரச்சொல்லி அவரிடம் கடைசி உதவியை கேட்கிறார். இனிமே இந்த கதைக்கு புல்ஸ்டாப் வச்சிடுறேன் எனவும் கூறிவிடுகிறார். (இப்படியே வில்லிக்கு சாதகமாக கதை எழுதுனா பார்க்கறவங்க காண்டாக மாட்டாங்களா டைரக்டர் ஐயா)

Tags:    

Similar News