சன் டிவியின் சூப்பர் சீரியல்கள்… புரோமோவை பார்த்துட்டு எபிசோட்டை பாருங்க!
சன் சீரியல்களின் அப்டேட்
Sun serials: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளுக்கான ப்ரோமோ தொகுப்புகள் வெளியாகி இருக்கிறது.
மருமகள்
சித்தி கால் செய்து ஆதிரையிடம் வேல்விழி, ’அவங்க அப்பா, தேவா, ஆதிரை எல்லாரும் கூட்டு சேர்ந்துகிட்டு உங்களுக்கு எதிராக வேலை செஞ்சிட்டு இருக்காங்க’ என்கிறார். சித்தப்பா வேல்விழியிடம், ’அவங்க பணத்த வாங்கிட்டு வந்து பிரபு கிட்ட கொடுக்கட்டும்.
அப்ப நம்ம கச்சேரியை ஆரம்பிச்சாதான் களை கட்டும்' என்கிறார். சித்தப்பா பிரபுவின் வீட்டு வாசலில் நின்று கொண்டு ’இவன் பொண்டாட்டிய தூண்டிவிட்டு நம்ம வீட்டு நகை எல்லாம் கேட்க சொல்லி இருக்கான்’ என்கிறார். ஆதிரை ’அப்படி ஒரு அவசியம் எங்களுக்கு இல்லை’ எனக் கூற பிரபு ’போதும் நிறுத்து ஆதிரை’ என்கிறார்.
சிங்கப்பெண்ணே
அன்பு அம்மா, ’இப்போ சொல்றேன். நல்லா கேட்டுக்கோ. என் வீட்டுக்கு மருமக இவ இல்லை’ என்கிறார். மகேஷ், ‘ அன்பு அவனுக்கு பிடிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழணும்’ என்கிறார்.
மகேஷ் அம்மா, ‘அன்பு மூலமா மகேஷை வெறுக்க வைக்கலாம்னு பார்த்தா எல்லாம் தலைகீழா மாறிடுச்சே’ என நினைக்கிறார்.
மூன்று முடிச்சு
நந்தினி, ’குடும்பமா சேர்ந்து என்கிட்ட உண்மையை மறைக்கிறாங்க. இவங்க மறைக்கிறது சுந்தரவள்ளி அம்மாக்கு தெரியறதுக்கு முன்னாடி எனக்கு தெரியணும்’ என நினைக்கிறார்.
சுந்தரவள்ளிக்கு நந்தினி- சூர்யா திருமணத்தினை ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய போகும் விஷயம் அர்ச்சனா மூலமாக தெரிய கோபமாகி வருகிறார். இவங்களாம் என்கிட்ட என்ன மறைக்கிறாங்க. அந்த உண்மை என் வாழ்க்கையை என்ன பண்ண போகுது என்று நந்தினி யோசிக்கிறார்.
கயல்
கயலின் ஹேண்ட்பேக்கை திருடர்கள் திருடி சென்றுவிட, டாக்டர் உன்னால நான் அனுபவிச்ச அசிங்கத்துக்கெல்லாம் இனி ஒன்னு ஒன்னா அனுபவிக்க போற என்கிறார்.
ஷாலினியிடம் அன்புவின் அம்மா, ’ உங்க அம்மா என்ன தனியா கூப்பிட்டு உனக்கு, அன்புவுக்கும் கல்யாணம் நடக்காதுன்னு தெளிவா சொல்லிட்டாங்க’ என்கிறார். கயல் காவல் நிலையம் வருகிறார்.
’என்னுடைய தங்கச்சிக்கு நாளைக்கு வளைகாப்பு சார். அதற்காகத்தான் அந்த நகையை வாங்கினோம். இருக்க எல்லா காசையும் போட்டு அதை வாங்கியதாக’ கூறுகிறார்.
அன்னம்
அன்னம் தன்னுடைய அப்பாவிடம், என்னுடைய மாமன் மகனை கல்யாணம் செஞ்சுக்கணும்னு நான் என்னைக்கும் விரும்பினதில்லை. இந்த கல்யாணத்திலும் எனக்கு விருப்பமில்லை’ என கூறி செல்கிறார்.
கார்த்திக் சரவணனிடம், ’கல்யாணம் என ஒன்னு பண்ணினா வேற சிந்தனை இல்லாம போயிடும்’ என்கிறார். அன்னம் அப்பா, ’அவ்ளோ பாசம் உன் தங்கச்சி மேல இருக்குது நான். அவ உயிர் மேல உனக்கு அக்கறை இருக்குதுனா. குணாவை கல்யாணம் செஞ்சிக்கோ’ என்கிறார்.
Also Read: ஆபீஸ் பாயைக் கூட தயாரிப்பாளர் ஆக்கி அழகுபார்த்த கேப்டன்... எந்தப் படத்துக்குத் தெரியுமா?