ரோகிணியை வெறுத்த விஜயா… கோபியிடம் உண்மையை சொன்ன பாக்கியா.. செந்தில் கொடுத்த கிப்ட்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் எபிசோட்
Vijay Serials: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ்2 மற்றும் சிறகடிக்க ஆசை தொடர்களில் நடக்க இருக்கும் எபிசோட்களின் தொகுப்புகள்.
சிறகடிக்க ஆசை
மனோஜ் மற்றும் ரோகிணி இடையே சண்டை அதிகமாகிறது. உங்க அம்மா என்னை அடிச்சது தப்பில்லையா எனக் கேட்க நீனும் என்னை பத்தி அப்படி பேசி இருக்க கூடாது என்கிறார் மனோஜ். இருவரும் மாற்றி மாற்றி பேசிக்கொள்ள ரோகிணி பேக்கை எடுத்துக்கொண்டு வெளியில் சென்று விடுகிறார்.
விஜயா மற்றும் அண்ணாமலை மருமகள் குறித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். நீ மூன்று பேரையும் ஒன்னா நடத்தி இருக்கணும் என்கிறார். மனோஜ் ரோகிணி சென்ற விஷயத்தை கூற ஹேண்ட் பேக்கோட தானே போனா வருவா என்கிறார்.
ரோகிணி வீட்டில் அவர் அம்மா நீயும் அப்படி பேசி இருக்க கூடாது. அவங்க அம்மாக்கு மாப்பிள்ளை ரொம்ப ஸ்பெஷல் அதுனால அப்படி பேசி இருக்கலாம். நீ தொலைச்சத அங்க தான் தேடணும். இங்க வந்திருக்க கூடாது என்கிறார்.
மனோஜ் விஜயாவிடம் வந்து ரோகிணி கால் பண்ணவா எனக் கேட்க அவர் வேண்டாம் என்கிறார். இதை கேட்டுக்கொண்டே ரோகிணி வீட்டிற்கு வர விஜயா மீனாவிடம் காபி கேட்கிறார். தலவலி வந்தா தானே காபி கேட்பீங்க என்க ஆமா வந்திருச்சுனு தான் கேட்டேன் என்கிறார். ரோகிணி விஜயாவை சமாதானம் செய்ய போக அங்கும் அவர் ஏட்டிக்கு போட்டியாக பேச கடுப்பில் வந்துவிடுகிறார்.
பாக்கியலட்சுமி
ஈஸ்வரி, கோபி ஆன்மீக பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்புகின்றனர். வழியில் காபி சாப்பிட நிறுத்தி அங்கு ஈஸ்வரி கோபியை இனி தன்னுடனே வைத்துக்கொள்ள சமாதானம் பேசுகிறார். பாதியில் வந்தவர்கள் பாதியிலேயே போகட்டும் என்கிறார்.
வீட்டிற்கு எல்லாரும் வர பாக்கியா காபி கொடுக்கிறார். கோபியிடம் தனியாக பேச வேண்டும் என அழைத்து சென்று ராதிகா வீடு மாறும் விஷயம் குறித்து சொல்லிவிடுகிறார். இதில் கோபி அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். பாக்கியா வெளியில் வந்துவிட என்ன பேசுன என ஈஸ்வரி கேட்கிறார்.
கோபி வந்து ராதிகாவை சென்று பார்த்து வருவதாக கூறுகிறார். ஆனால் ஈஸ்வரி, இனியா, செழியன் தடுக்க இருந்தும் அவர்களை சமாளித்துவிட்டு கோபி ராதிகாவை பார்க்க கிளம்பிவிடுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்2
காசை எடுத்து வரும் செந்தில் மீனாவுக்கு ஒரு பேக்கை வாங்க தேடிக்கொண்டு இருக்கிறார். இன்னும் பணம் தேவைப்பட பழனிக்கு கால் செய்து கேட்கிறார். ஒரு கட்டத்தில் மீனாவுக்கு ஒரு பேக்கை தேர்வு செய்து வாங்கிவிடுகிறார்.
வீட்டிற்கு வர தங்கமயிலுக்கு கேக் வெட்டி கொண்டாடுகின்றனர். பின்னர் சாப்பிட்டுக்கொண்டு இருக்க சரவணனிடம் கேக் எவ்வளோ என்கிறார். 100 மீதி இருக்குப்பா எடுத்து தரேன் என்கிறார். இதைக் கேட்டு பாண்டியன் அதிர்ச்சி அடைகிறார். பின்னர் செந்தில் புகைப்படத்தில் பேகை காட்ட மீனா பிடிக்கவில்லை என கூறி விடுகிறார். ஆனால் அது தனக்கு தான் என தெரிந்ததும் சமாளித்து பேகை சந்தோஷமாக வாங்கிக் கொள்கிறார். சிசிடிவியில் எதுவும் தெரியவில்லை என பாண்டியன் சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார்.
Also Read: ஆபீஸ் பாயைக் கூட தயாரிப்பாளர் ஆக்கி அழகுபார்த்த கேப்டன்... எந்தப் படத்துக்குத் தெரியுமா?