சன் டிவிக்கு டஃப் கொடுக்கும் சிறகடிக்க ஆசை… இனிமே தான் ஆட்டம் செமையா இருக்கும்…
Siragadikka Aasai: சின்னத்திரை தொடர்களின் வரவேற்பை சொல்லும் வகையில் டிஆர்பியில் முதல் பத்து இடத்திற்கான டிஆர்பி அப்டேட் குறித்த தொகுப்புகள்.
பல மாதங்களாக சன் டிவி தொடர்கள் மட்டுமே டாப் 3 இடத்தினை பிடித்து கொண்டு இருக்கிறது. முன்பெல்லாம் டாப் முதலிடத்தினை விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை தக்க வைத்து கொண்டு வந்தது.
ஆனால் அவர்கள் கதையை சரியாக எடுத்து செல்லாமல் அந்த இடத்தினை தவறவிட்டு விட்டனர். பல கட்ட போராட்டத்துக்கு பின்னர் டிஆர்பியில் ஒரு முன்னேற்றம் இருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் சன் டிவியின் சிங்கப்பெண்ணே முதலிடத்தில் உள்ளது.
இரண்டாம் இடத்தில் சன் டிவியின் மூன்று முடிச்சு தொடர் இடம்பெற்றுள்ளது. மூன்றாம் இடத்தில் கயல் சீரியல் இடம்பிடித்து உள்ளது. கடந்த சில வாரங்களாகவே இந்த மூன்று சீரியல்களும் மாற்றி மாற்றி மூன்று இடங்களையும் தக்க வைத்து கொண்டு இருக்கிறது.
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை நான்காம் இடம் பிடித்துள்ளது. கதையினை மாற்றும் பொருட்டு அடுத்தடுத்த விறுவிறுப்பான கதைக்களம் அமைக்கப்பட்டு வருவதால் இந்த முன்னேற்றம் எனக் கூறப்படுகிறது. ஐந்தாவது இடத்தில் சன் டிவியின் மருமகள் சீரியல் இடம்பிடித்து இருக்கிறது.
விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சீரியல் அய்யனார் துணை. இந்த சீரியல் அண்ணன், தம்பிகளின் பாசம், ஹீரோயின் நிலாவின் நடிப்பு என நல்ல வரவேற்பை பெற்று வருவதால் தொடர்ந்து முன்னேறி தற்போது ஆறாவது இடத்திற்கு வந்துள்ளது.
ஏழாவது இடத்தில் அன்னம் சீரியலும் எட்டாவது இடத்தில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலும் இடம்பிடித்துள்ளது. பெரிய அளவில் கதை ஈர்ப்பு இல்லை என்றாலும் சன் டிவியின் பிரைம் டைம் தொடர் என்பதால் இந்த இடத்தில் இருக்கிறது.
ஒன்பதாவது இடத்தில் விஜய் டிவியின் முக்கிய தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ்2 இடம் பிடித்துள்ளது. இந்த சீரியலின் கதைக்களமும் விறுவிறுப்பாகி இருப்பதற்கே இந்த முன்னேற்றம் காரணமாகி இருக்கிறது. பத்தாவது இடத்தில் ஒற்றை சீரியலான ஜீ தமிழின் கார்த்திகை தீபம் இருக்கிறது.