ஓவர் குஷியில் விஜயா… கோபத்தில் பாக்கியா… அப்பத்தாவின் அதிர்ச்சி முடிவு…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் எபிசோட் அப்டேட்கள்
Vijay TV: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளின் தொகுப்புகள்.
சிறகடிக்க ஆசை
மீனாவிற்கு கல்யாண ஆடர் ஒன்று கிடைத்திருக்க அங்கு வருகிறார் சிந்தாமணி. மண்டபத்தின் மேனேஜரும் இவங்கதான் எப்பவும் நமக்கு டெக்கரேஷன் பண்ணி தருவாங்க எனக் கூற ஆர்டர் கொடுத்தவர்கள் மீனாதான் மீண்டும் என கூறிவிடுகின்றனர். உடனே சிந்தாமணி இருவரும் கொட்டேஷன் போடலாம் உங்களுக்கு யார் பிடிக்குதோ எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறார்.
மீனா அவர்களுக்கு என்ன தேவை என விசாரித்து ஒரு லட்சத்து இருவது ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார். ஆனால் சிந்தாமணி 60 ஆயிரம் ரூபாய் எனக் கூற ஆர்டர் அவர்களுக்கே கொடுத்து விடுகின்றனர். சிந்தாமணியின் ஆள் இது நமக்கு கட்டுப்பாடு ஆகாது எனக் கூற, பங்ஷனுக்கு முந்தின நாள் விலையை ஏற்றி விடுவேன் என சொல்லி விடுகிறார்.
மனோஜின் பீச் ஹவுஸ் செல்ல புடவை செலக்ட் செய்து கொண்டிருக்கிறார். அப்பொழுது மீனா பூ கட்டிக்கொண்டு இருக்க போய் தூங்க சொல்லுகிறார் விஜயா. முத்து லேட் ஆக வருவதாக கூற விஜயா கடுப்படித்து விட்டு செல்கிறார்.
பாக்கியலட்சுமி
கோபியை அழைத்து பேசும் பாக்கியா உடம்பு சரியில்லை என வீட்டிற்கு வந்தீங்க. எப்போ உங்க வீட்டுக்கு கிளம்புறீங்க எனக் கேட்கிறார். இதனால் கோபி அதிர்ச்சியாகிறார். உங்களுக்கு மனைவி இருக்காங்க அவங்க கூட பேசி முதல்ல உங்க வீட்டுக்கு கிளம்ப பாருங்க என கூறி செல்கிறார். காலையில் பாக்கியா சமைத்துக் கொண்டிருக்க அவருக்கு கோபி காபி போட்டு கொடுக்கிறார்.
கவலையாக உட்கார்ந்து இருக்கும் ராதிகா கோபி வீட்டில் நடந்த விஷயங்களை அவரின் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். போலீசுக்கு போகலாமா என அவர் கேட்க அவரை வலுக்கட்டாயமாக இங்கு கொண்டு வருவதில் தனக்கு விருப்பமில்லை என கூறிவிடுகிறார்.
கோபியை பார்க்க பாக்கியா வீட்டிற்கு வரும் மயு தயங்கி நிற்கிறார். பாக்கியா வந்து உள்ளே அழைக்க மயு மறுத்துவிடுகிறார். ராதிகா பாக்கியாவை வந்து கோபமாக சாடி விட்டு செல்கிறார். இந்த கடுப்பில் உள்ளே வரும் பாக்கியா கோபியிடம் எப்போதும் வீட்டுக்கு போவீங்க என கோபமாக கேட்கிறார். இனியா மற்றும் ஈஸ்வரி கோபிக்கு ஆதரவாக பேசுகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2
அப்பத்தாவை வெளியில் நிறுத்தி இருக்கும் சக்திவேல் மற்றும் வெற்றிவேல் கோமதி மற்றும் அவர் குடும்பத்தை மறந்து விட்டு உள்ளே வரவேண்டும். இல்லையென்றால் இப்படியே போய்விட வேண்டும் என கூறிவிட்டுகின்றனர். இதனால் கோமதி மற்றும் பாண்டியன் இருவரும் தங்கள் வீட்டிற்கு வரவேண்டும் என அப்பத்தாவிடம் கோரிக்கை வைக்கின்றனர்.
ஆனால் அப்பத்தா கடைசி காலத்தில் தன்னுடைய மகன்களை விட்டு வர விருப்பம் இல்லாமல் இனி கோமதி வீட்டிற்கு செல்ல மாட்டேன் எனக்கூறி மகன்கள் வீட்டிற்கு சென்று விடுகிறார். இதனால் கோமதி தன்னுடைய வீட்டில் கவலையாக உட்கார்ந்திருக்கிறார். ஆனால் பாண்டியன் கோபித்துக் கொள்வார் என கவலையில் இருக்கிறார். இதனால் தன் அம்மா குறித்து கோபமாக பேச பாண்டியன் அவரை சமாதானம் செய்கிறார்.