மீனாவின் கொலு ஐடியா… பாக்கியாவுக்கு தொடங்கிய சோதனை… தங்கமயில் செய்யும் பித்தலாட்டம்!...

விஜய் டிவியின் பிரபல தொடர்களின் இன்றைய தொகுப்பு

By :  Akhilan
Update: 2024-09-24 05:46 GMT

Bakkiyalakshmi

VijayTv: சிறகடிக்க ஆசை தொடரில் மீனா தன்னுடைய அம்மா மற்றும் தங்கையிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது வரும் சத்யா தான் காலேஜ் செல்வதாக கூறி செல்கிறார். அப்பொழுது அங்கு வரும் பெண்மணி ஒருவர் கொலு பிரசாதம் செய்ய இந்திராவிடம் ஆர்டர் கொடுக்கிறார்.

மீனாவிடம் கொலு வைக்கிறீர்களா என கேட்க ஆனால் என்னுடைய மாமியார் என்ன சொல்வார் என தெரியவில்லை என்கிறார். வீட்டிற்கு வரும் மீனா இதை முத்துவிடம் சொல்ல அத்தையிடம் சொல்லி எப்படி அனுமதி வாங்குவது என பேசிக் கொண்டிருக்கின்றனர். பின்னர் அவர்களே விஜயாவிடம் இதை சொல்ல அவர் இவர்களை நக்கல் செய்கிறார்.

பாக்கியலட்சுமி தொடரில் கோபியின் செஃப் பாக்யாவின் ஹோட்டலில் வந்து வேலைக்கு வாய்ப்பு கேட்கிறார். பின்னர் இருவரும் தீவிரமாக ஆராய்ந்து அவரை வேலைக்கு சேர்த்துக் கொள்கிறார். கல்லூரியில் இனியா டான்ஸ் பயிற்சி எடுத்து போட்டியில் கலந்து கொள்கிறார்.

பின்னர் அவர் நன்னாரே பாடலுக்கு நடனமாடி அனைவரையும் அசத்தி விடுகிறார். பாக்கியாவை சந்திக்க வரும் பழனிச்சாமி அவருடன் பேசிக் கொண்டிருக்கிறார். பின்னர் பாக்யா செப்பை வேலைக்கு சேர்த்த விஷயம் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் தங்கமயில் தன்னுடைய வீட்டிற்கு வந்து சரவணன் சம்பளத்தை கொடுத்த விஷயம் குறித்தும், மீனா மற்றும் ராஜி இவருடன் பேசாமல் இருப்பது குறித்தும் சொல்லிக் கொண்டிருக்கிறார். வெற்றிவேல் வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்க தங்கவேலுக்கு பெண் கொடுக்க நாளை பெண் வீட்டிலிருந்து இங்கு வருவதாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

தங்க மயிலின் அம்மா அவர் சொல்லியதை கேட்டுவிட்டு வீட்டில் சென்று சண்டையிட தயாராகிறார். ஆனால் அவர் தந்தை இதெல்லாம் வேண்டாம் என அவரை சமாதானம் செய்கிறார். நல்லவளா இருக்க ட்ரை செய்யாதே. உனக்கு தேவையானதை மட்டும் பார்த்து புரிந்துக்கொள் என சொல்லி அனுப்புகிறார்.

பாண்டியன் பிறந்தநாளை குறித்து அனைவரும் மாடியில் நின்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.

Tags:    

Similar News